மேலும் அறிய

சென்னையில் அதிர்ச்சி ; மது தகராறில் வாலிபர் கற்கள் மற்றும் பீர்பாட்டிலால் தாக்கி கொடூர கொலை

மது போதையில் கற்கள் மற்றும் பீர் பாட்டிலால் இளைஞர் மீது நண்பர்கள் தாக்குதல்

பலத்த காயங்களுடன் இளைஞர் உடல்

சென்னை வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பகுதி யு.பிளாக்கில் உள்ள பூங்காவில் உடலில் பலத்த காயங்களுடன் வாலிபர் மயங்கி கிடப்பதாக பெரும்பாக்கம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது மயங்கி கிடந்தவர் பெரும்பாக்கம் எழில் நகர் எஸ்.பிளாக்கை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை மீட்டு உடனடியாக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளி

அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், கார்த்திகேயன் பழைய குற்றவாளி என்பதும், ஏற்கனவே பல குற்றங்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்றதும் தெரிய வந்தது.

மேலும் சம்பவத்தன்று இரவு அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் குமார், விஜயகுமார், சரத் என்ற சரத்குமார், சரண்ராஜ், கார்த்திக் ஆகியோருடன் பார்க்கில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து அவர்களை தேடினர். அதே பகுதியில் மறைந்திருந்த குமார் (வயது 27), விஜயகுமார் (வயது 28), சரத் என்ற சரத்குமார் (வயது 35), சரண்ராஜ் என்ற கோகுல் (வயது 29), கார்த்திக் (வயது 26) ஆகிய 5 பேரையும் தனிப் படையினர் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

பணம் இல்லை - சட்டை பாக்கெட் கிழிப்பு

இதில், இவர்கள் குடியிருக்கும் பகுதியில் பாபு என்பவர் இறந்து விட்டார். இவரது சாவில் கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரும் மது குடித்து விட்டு டான்ஸ் ஆடியுள்ளனர். போதை இறங்கிய நிலையில் கார்த்திகேயன் மீண்டும் மதுகுடிக்க குமாரிடம் பணம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என கூறியதால், கார்த்திகேயன், குமார் சட்டை பாக்கெட்டில் கையை விட்டு பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது, குமாரின் சட்டை பாக்கெட் கிழிந்துள்ளது. இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. குமார் அங்கிருந்து சென்று விட்டார். இதையடுத்து அன்றிரவு நண்பர்களான விஜயகுமார், சரத் என்ற சரத்குமார், சரண்ராஜ், கார்த்திக் ஆகியோருடன் சேர்ந்து கார்த்திகேயனை தேடியுள்ளனர்.

கற்கள் மற்றும் பீர் பாட்டிலால் தாக்குதல்

கார்த்திகேயன் யூ பிளாக் பகுதியில் உள்ள பார்க்கில் மது அருந்தி கொண்டிருந்தது தெரிய வந்தது. அங்கு சென்றவர்கள் கார்த்திகேயனிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது, கார்த்திகேயன் வைத்திருந்த மதுபாட்டிலால் 5 பேரையும் தாக்கியுள்ளார்.

இதனால் கோபமடைந்த 5 பேரும் சேர்ந்து பீர்பாட்டில் மற்றும் கல்லால் கார்த்திகேயனை சரமாரி தாக்கியுள்ளனர். மயங்கி கீழே விழுந்ததும் பெரிய கல்லால் சரமாரி தாக்கி விட்டு தப்பியது தெரிய வந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
“100% பாஸ் பண்ணா பிளைட் ஏறுவீங்க!” - சென்னை பள்ளியின் மாஸ் சர்ப்ரைஸ்... வாயடைத்துப்போன மாணவர்கள்!
100% பாஸ் பண்ணா பிளைட் ஏறுவீங்க! - சென்னை பள்ளியின் மாஸ் சர்ப்ரைஸ்... வாயடைத்துப்போன மாணவர்கள்!
" கள்ளக் காதலை கைவிடாத தாய் " கஞ்சா போதையில் மகன் செய்த கொடூர காரியம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget