மேலும் அறிய

Chennai: 17 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை! கணவன் மீது பாய்ந்த வழக்கு!

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை கொடுத்த கணவன் மீது 4 பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி சுமதி. இவர்களது 17 வயது மகளுக்கு, அதே பகுதியை சேர்ந்தவர் 28 வயதான முருகனை கடந்த ஆண்டு, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். பின்னர், அவர்கள் அதே பகுதியில் தனியே வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

கடந்த மாதம் 25ம் தேதி சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் போது, மருத்துவர்கள் பரிசோதனையில் சிறுமிக்கு சட்ட விரோதமாக திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. உடனே இது பற்றி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு விரைந்து சென்ற போலீசார், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதில், 16 வயதில் அச்சிறுமிக்கு திருமணம் நடந்ததும், தற்போது குழந்தை பிறந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமியின் கணவர் முருகன் மீது போக்சோ உட்பட 4 பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களுடைய பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர். இதையறிந்த 5 பேரும் தலைமறைவாகினர்.

கடந்த 2 தினங்களுக்கு முன், எழும்பூர் அரசு மருத் துவமனையில், 16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியின் கணவர் பிரகாஷ் (25) மீது, போக்சோ உட்பட4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, இவர்களுடைய பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான 10 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதேபோல், கடந்த மே மாதம் 20 ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் பெண் ஒருவருக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து பிரசவித்த பெண் மிகவும் சிறிய பெண்ணாக இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து அந்த பெண்ணின் விவரங்களை சேகரித்ததில் அந்த பெண் 17 வயது சிறுமி என்று அறிந்ததும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் குறித்து மேலும் சில  விவரங்கள் கேட்டபோது அந்த சிறுமியால் எதுவும் சொல்ல தெரியவில்லை. இதையடுத்து, அவரிடம் விசாரணை செய்யமுடியாமல் காவல்துறையினர் தவித்தனர். அதன் பின்பு குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். 

குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து சிறுமியிடம் லாபகமாக விசாரணை செய்ததில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும், தனக்கும் இரு வீட்டார் முன்னிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 25 ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் முகப்பேரில் வாடகை வீட்டில் குடித்தனம் நடத்தி வந்ததாகவும், அந்த சிறுமி தனது கணவர் சதீஷ்குமார் தற்போது அம்பத்தூருக்கு வேலைக்கு சென்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

chennai : 17-year-old girl birth in girl baby govt hospital maternity ward husband arrest

பின்னர் சிறுமி வழக்கை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்துறைக்கு ஒப்படைக்க, மனைவிக்கு பெண்குழந்தை பிறந்திருப்பதாக கூறி சதீஷ்குமாரை காவல்துறையினர் வரவழைத்தனர்.

தனது மனைவிக்கு பாப்பா பொறந்திருக்கு என்று மகிழ்ச்சியுடன் சாக்லேட் வாங்கிவந்த சதீஷ்குமாரை மடக்கிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். மனைவியை திருமணம் செய்தவதற்கு முன்புதான்  பெண்ணின் வயது தனக்கு தெரியாது என்றும், திருமணத்திற்கு பின்புதான் அவர் 17 வயது சிறுமி என்பது தெரியவந்ததாகவும் தெரிவித்தார். 

ஆதார் அட்டை அடிப்படையில் சிறுமிக்கு திருமணத்தின் போது 16 வயது என்றும் தற்போது 17 வயது என்பதையும் உறுதிப்படுத்திய போலீசார் சதீஷ்குமாரை கைது செய்ய சட்ட ஒப்புதல் பெற்றனர். தொடர்ந்து, வயது பூர்த்தியாகாத மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய குற்றத்திற்காக சதீஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.  மேலும், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சதீஷ்குமார் புழல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Car Attack : ’’பாஜகவின் கொலை முயற்சி!’’கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு! - ஆம் ஆத்மிCongres Tvk Alliance : விஜயை அழைத்த காங்கிரஸ்! நம்பிக்கையா? அவநம்பிக்கையா? பகீர் கிளப்பும் பாஜக!Bussy Anand Inspection on Parandur : விஜய் போட்ட ப்ளான்.. பரந்தூர் போன புஸ்ஸி! 5 ஏக்கர் ரெடி!Bomb Saravanan: ”Armstrong கொலைக்கு பழிதீர்ப்பேன்”ஸ்கெட்ச் போட்ட பாம் சரவணன்!சுட்டுப்பிடித்த POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
பொங்கல் பண்டிகைக்கு பல கோடிக்கு மது விற்பனை; புள்ளிவிவரத்தை எடுத்துவிட்ட அன்புமணி
பொங்கல் பண்டிகைக்கு பல கோடிக்கு மது விற்பனை; புள்ளிவிவரத்தை எடுத்துவிட்ட அன்புமணி
Special Train from Mandapam; பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
Delhi Election; கெஜ்ரிவால் அறிவிப்பால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஜாக்பாட்...
டெல்லி தேர்தல் ; கெஜ்ரிவால் அறிவிப்பால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஜாக்பாட்...
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
Embed widget