Crime news: பீச் போவோமா? ஆசையாக பேசி கடத்திச்செல்லப்பட்ட 14 வயது மாணவி! அறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை.!
பள்ளி மாணவி வாலிபர் ஒருவருடன் பைக்கில் மெரினா கடற்கரை நோக்கி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. உடனே போலீசார் வாலிபர் பயன்படுத்திய பைக் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.
சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த வசந்தி (பெயர்மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 14 வயதில் மகள் உள்ளார். இவர் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். கடந்த 11ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற மகள் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது தாய் வசந்தி, மகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் மகளின் போன் வேலை செய்யவில்லை. பிறகு மகளுடன் படிக்கும் தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் மகள் கிடைக்கவில்லை.
பின்னர் சம்பவம் குறித்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மகள் மாயமானது குறித்தும், அவரை கண்டுபிடித்தும் தரும்படியும் வசந்தி புகார் அளித்தார். அந்த புகாரின் படி மாயமான சிறுமியின் வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில் பள்ளி மாணவி வாலிபர் ஒருவருடன் பைக்கில் மெரினா கடற்கரை நோக்கி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. உடனே போலீசார் வாலிபர் பயன்படுத்திய பைக் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அதில், மயிலாப்பூர் தர்மராஜா கோயில் தெருவை சேர்ந்த 25 வயதான கார்த்திக் என்ற வாலிபருக்கு சொந்தமான பைக் என பிறகு தெரியவந்தது. உடனே போலீசார் கார்த்திக் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்திய போது, கார்த்திக் காலையில் இருந்து வீட் டிற்கு வரவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
உடனே போலீசார் காத்திக் பயன்படுத்தும் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அதில் கார்த்திக் கண்ணகிநகர் பகுதியில் இருப்பதாக செல்போன் சிக்னல் காட்டியது. அதைதொடர்ந்து போலீசார் செல்போன் சிக்னல் உதவியுடன் சென்றபோது கண்ணகி நகரில் கார்த்திக் உறவினர் ஒருவர் வீட்டில் இருப்பதாக சிக்னல் காட்டியது. உடனே சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு அதிரடியாக போலீசார் வீட்டிற்குள் புகுந்து சோதனை செய்ததில் கார்த்திக் பள்ளி மாணவியை காலை முதல் அறையில் அடைத்து வைத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசாரை பார்த்ததும் பள்ளி மாணவி நடந்த சம்பவத்தை அதிர்ச்சியுடன் கூறி கதறியுள்ளார்.
உடனே பள்ளி மாணவியை கடத்திய கார்த்திக்கை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், சிறுமி பள்ளிக்கு செல்லும்போது பின்தொடர்ந்து காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, அடிக்கடி மெரினா கடற்கரைக்கு அழைத்து வந்து பேசி வந்துள்ளார். சம்பவத்தன்று பள்ளி மாணவியை மெரினா கடற்கரைக்கு போகலாம் என்று கூறி பைக்கில் ஏற்றி வந்துள்ளார்.
பிறகு மெரினா கடற்கரையில் சிறிது நேரம் இருந்துவிட்டு கண்ணகி நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று வீட்டின் அறையில் அடைத்து வைத்து தொடர் பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி விசித்ரா, தலைமையிலான போலீசார், கார்த்திக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிர டியாக கைது செய்தனர். சிறுமியை கடத்த பயன்படுத்திய பைக் மற்றும் செல்போனை கார்த்திக்கிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதன்பின்னர் கார்த்திக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறை நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மயிலாப்பூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்