பயன்படுத்திக்கோங்க சென்னை மக்களே.! நடமாடும் பாஸ்போர்ட் சேவை வேன் துவக்கம்
Chennai Passport Seva Van: சென்னையில் பாஸ்போர்ட் சேவைகளை விரிவுப்படுத்தும் நோக்கத்தில், பாஸ்போர்ட் சேவை வேன் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நடமாடும் பாஸ்போர்ட் சேவை வேன் வழங்கப்பட்டது.
சென்னையில் தொலைதூரம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பாஸ்போர்ட் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், பிப்ரவரி 03-ம் தேதி நடமாடும் பாஸ்போர்ட் சேவை வேன் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ். விஜயகுமாரிடம் வழங்கப்பட்டது.
இந்த முயற்சி நீண்ட தூரம் பயணிக்கும் தனிநபர்களுக்கு பாஸ்போர்ட் சேவைகளை எளிதாக அணுக உதவுகிறது. மேலும், இத்தகைய திட்டங்கள் பள்ளி/கல்லூரி மாணவர்களிடையே பாஸ்போர்ட் சேவைகள், நடைமுறைகள் மற்றும் அடையாள ஆவணமாக பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. நடமாடும் பாஸ்போர்ட் சேவை வேன், பாஸ்போர்ட் விண்ணப்பங்களை முகாம் முறையில் செயல்படுத்தும் என கூறப்படுகிறது.
ஆகையால், பொதுமக்கள் தங்களது பாஸ்போர்ட் குறித்தான சந்தேகம் , திருத்தங்கள் , புதுப்பித்தல் உள்ளிட்டவை குறித்து பாஸ்போர்ட் சேவை வேனில், இருக்கும் அதிகாரிகளிடம் தங்களது சந்தகங்களை கேட்டு தெளிவு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Chennai Power Shutdown: சென்னை மின்தடை பகுதிகள்: இன்று ( 05.02.2025) எங்கெல்லாம் தெரியுமா?
இதனால, இத்தகைய சேவையை பயன்படுத்தி கொள்ளுமாறு , அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோயம்புத்தூர் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு பிறகு , நடமாடும் பாஸ்போர்ட் சேவை வேனைப் பெறும் தமிழ்நாட்டின் இரண்டாவது பாஸ்போர்ட் அலுவலகம் சென்னை மண்டல அலுவலகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

