Chennai Rains: அடுத்த 24 மணி நேரம் - வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங் - என்ன தெரியுமா ?
நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு.
நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.பாலசந்திரன் பேசியதாவது:
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி விட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. நாளை டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அக்டோபர் 1 முதல் தற்போது வரை 12 செ.மீ வரை மழை பதிவாகி உள்ளது..இது இயல்பை விட 84 சதவிகிதம் அதிகம்
சென்னைக்கு இன்றும் ரெட் அலர்ட் கொடுத்துள்ளோம். காற்று அழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட திசை நோக்கி நகர்கிறது. இதனால் கனமழை நீடிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.