"போன வருஷம் இங்க என்ன நடந்தது" என்ன செய்யப் போறீங்க .. நள்ளிரவில் களத்தில் இறங்கிய துணை முதல்வர்
Chennai Red Alert: கனமழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை பள்ளிக்கரணையில் கனமழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ரெட் அலர்ட் - Red Alert
தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை இன்று (அக்.15) தொடங்க வாய்ப்பு உள்ள நிலையில், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 3 டெல்டா மாவட்டங்களுக்கு (அக்.15) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (அக்.16) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு அலர்ட்:
இன்று (அக்.15) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் அலர்ட்:
இன்று (அக்.15) வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
வடகிழக்கு பருவமழை மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே சென்னையில் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டிருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். பொதுமக்களுக்கு உதவுவதற்காக 1913 என்ற இலவச உதவி எண்ணையும் ஏற்பாடு செய்திருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி கூறியிருந்தார்.
சென்னையில்cஅதிகளவு மழைநீர் தேங்கும் வேளச்சேரி, தாம்பரம், புறநகர் பகுதிகளில் உடனடியாக மழைநீரை அப்புறப்படுத்துவதற்கும் மோட்டார்கள், பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னையில் பல இடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் சூழலில் ஏற்கனவே கடும் நெரிசலாக இருப்பதால் அந்த பகுதிகளில் மழைநீர் தேங்கினால் அதை உடனடியாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யவும் அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர் ஆய்வில் துணை முதலமைச்சர்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நள்ளிரவில் பள்ளிக்கரணை மற்றும் கோவிலம்பாக்கம் இடையே உள்ள நாராயணபுரம் ஏரியின் கரையோரத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளிடம் கடந்த ஆண்டு இந்த பகுதியில் மழை நீர் தேங்கிய வீடியோக்களை பார்த்து, இந்தாண்டு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.
மேலும் நாராயணபுரம் ஏரியின் கரைப்பகுதி பலப்படுத்தப்பட்டுள்ள விதம் குறித்து ஆய்வு செய்து, மழை நீர் ஏரிக்கு வந்து சேருகிற வழித்தடங்கள் தூர்வாரப்பட்டுள்ள விதம், கரைகளின் தன்மை உள்ளிட்டவைக் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தார். நாராயணபுரம் ஏரிக்கு, கீழ்க்கட்டளை ஏரியில் இருந்து உபரிநீர் வரும் கால்வாயை ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களுடைய கோரிக்கைகள் கேட்டறிந்தார்.
நள்ளிரவிலும் தொடர்ந்த ஆய்வு
தொடர்ந்து இராயப்பேட்டை ஜானி ஜான் கான் சாலை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் வழியாக மழைநீர் வடிகின்ற விதத்தை நேரில் ஆய்வு உதயநிதி ஸ்டாலின்,கொட்டும் மழையில் நள்ளிரவிலும் மக்களுக்காக தொண்டாற்றி வருகின்ற தூய்மைப்பணியாளர்களுக்கு பால், சிற்றுண்டிகளை வழங்கினார். தொடர்ந்து சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் , நள்ளிரவில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டது கூறுகிறது.