மேலும் அறிய

கனமழையால் ஸ்தம்பித்துப்போன மாங்காடு; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மழை நீரை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட ஓம் சக்தி நகர், ஜனனி நகர், சக்ரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சுமார் 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழை நீர் தொடர்ந்து மூன்றாவது நாட்களாக சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் வீட்டின் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் குன்றத்தூர்-குமணன்சாவடி சாலையின் ஓரங்களில், இருந்த கால்வாய்கள் உடைக்கப்பட்டு மழைநீர் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. 
 
கனமழையால் ஸ்தம்பித்துப்போன மாங்காடு; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
 
இருப்பினும் வழியாத மழை நீரில் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகள் மூலம் வீட்டில் உள்ளவர்களை மீட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே, அப்பகுதியில் வசித்து வரும் பொது மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். தொடர்ந்து ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்த பகுதியில் இருக்கும் நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் தண்ணீர் வடியாத காரணத்தினால், இன்று காஞ்சிபுரம் மாங்காடு பகுதியில், இருந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இப்பகுதியில் இருக்கும் குடியிருப்பு பகுதி வீட்டிற்குள் நுழைந்த தண்ணீர் கூட மூன்று நாட்களாக, வெளியேறாமல் இருப்பதால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.
 
கனமழையால் ஸ்தம்பித்துப்போன மாங்காடு; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காற்றழுத்த தாழ்வு பகுதி

நேற்று வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக - கேரள பகுதிகளை கடந்து அரபிக் கடல் பகுதிகளில் செல்லக்கூடும்.

கனமழையால் ஸ்தம்பித்துப்போன மாங்காடு; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இதன் காரணமாக, இன்று  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிககனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Embed widget