மேலும் அறிய

Chennai Rain: அடுத்த 3 மணி நேரத்தில் சென்னையை நனைய வைக்கப்போகும் மழை! இந்த பகுதியெல்லாம் உஷார்..!

சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை பெய்யும் இடங்கள்

எழும்பூர், மயிலாப்பூர்,தண்டையார்பேட்டை, மாதவரம், மாம்பலம், பெரம்பூர், திருவள்ளூர், புரசைவாக்கம், கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர்,பொன்னேரி, திருப்போரூர்,வண்டலூர் ஆகிய இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்:

தென்மேற்கு வங்க கடலில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (நவ.21) காலை 0830 மணி அளவில் காரைக்காலில்  இருந்து கிழக்கு-வடகிழக்கே சுமார் 470 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 420 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திர, தமிழக-புதுவை  கடற்கரை நோக்கி நகர்ந்து நாளை (நவ.22) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று வானிலை:

தென் தமிழகத்தில் இன்று (நவ.21) ஓரிரு இடங்களில்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை வானிலை:

வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும்,  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

சென்னை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்;  சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தரைக்காற்று  சில நேரங்களில் மணிக்கு 20-25 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 30  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

இன்று மற்றும் நாளையில் ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக-புதுவை கடலோரப்பகுதிகள்,  இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காலை வரை `சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். 

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi Election: ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
EPS IT Raid: கூட்டணிக்கு வரலனா அவ்ளோதான்; அதிமுகவுக்கு செக்வைத்த பாஜக? ஐ.டி ரைடால் சட்டசபைக்கு வராத இபிஎஸ்.!
EPS IT Raid: கூட்டணிக்கு வரலனா அவ்ளோதான்; அதிமுகவுக்கு செக்வைத்த பாஜக? ஐ.டி ரைடால் சட்டசபைக்கு வராத இபிஎஸ்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2Anita Anand | அடுத்த கனடா பிரதமர் யார்? ரேஸில் தமிழ் பெண்! யார் இந்த அனிதா ஆனந்த்? | Canada“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi Election: ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
EPS IT Raid: கூட்டணிக்கு வரலனா அவ்ளோதான்; அதிமுகவுக்கு செக்வைத்த பாஜக? ஐ.டி ரைடால் சட்டசபைக்கு வராத இபிஎஸ்.!
EPS IT Raid: கூட்டணிக்கு வரலனா அவ்ளோதான்; அதிமுகவுக்கு செக்வைத்த பாஜக? ஐ.டி ரைடால் சட்டசபைக்கு வராத இபிஎஸ்.!
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Anna University Abuse: அண்ணா பல்கலை. வன்கொடுமை; கல்லூரி வளாகங்களில் இதெல்லாம் கட்டாயம்- அமைச்சர் அதிரடி!
Anna University Abuse: அண்ணா பல்கலை. வன்கொடுமை; கல்லூரி வளாகங்களில் இதெல்லாம் கட்டாயம்- அமைச்சர் அதிரடி!
LIVE | Kerala Lottery Result Today (07.01.2025): கேரள லாட்டரி முடிவுகள் வெளியீடு; முதல் பரிசு டூ ஆறுதல் பரிசு- முழு லிஸ்ட்!
LIVE | Kerala Lottery Result Today (07.01.2025): கேரள லாட்டரி முடிவுகள் வெளியீடு; முதல் பரிசு டூ ஆறுதல் பரிசு- முழு லிஸ்ட்!
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
Embed widget