மேலும் அறிய
Advertisement
பெரம்பூரில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சென்ற ரயில் மீது கற்களை எறிந்த மாநிலக்கல்லூரி மாணவர்கள்
மாநில கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். பதிலுக்கு பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் தாக்க முற்பட்டனர்
சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி சென்ற திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். இதே போல் சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் சென்று கொண்டிருந்த ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். இரு ரயில்களும் ஒரே திசையில் சென்று கொண்டிருந்தன. பெரம்பூர் ரயில் நிலையம் தாண்டியதும் மாநில கல்லூரி மாணவர்கள் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர். பொறுமையிழந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து கீழே இறங்கிய மாநில கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சென்ற மின்சார ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து அரக்கோணம் சென்ற மின்சார ரயிலும் நிறுத்தப்பட்டது. மாநில கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். பதிலுக்கு பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் தாக்க முற்பட்டனர்.. அப்போது அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த செம்பியம் போலீசார், மாநில கல்லூரி மாணவர்கள் 15 பேரை பிடித்து தற்போது காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்களுக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரணமாக சிறிது நேரம் என்ற இரண்டு ரயில்களும் நிறுத்தப்பட்டு பின்னர் புறப்பட்டு சென்றது இதனால் பெரம்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வீடு வாங்கித் தருவதாகக் கூறி 15 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் பங்குதாரர் கைது
சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் இவரது மனைவி நர்மதா வயது 30. இவர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு பெரம்பூர் பட்டேல் ரோட்டில் உள்ள கோல்டன் லேண்ட் புரமோட்டர்ஸ் என்ற அலுவலகத்தில் உதவியாளராகப் பணி புரிந்து அந்த நிறுவனத்தில் பங்குதாரராக இருந்த சீனிவாசன் என்பவரிடம் 15 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஆறு சவரன் தங்க நகை உள்ளிட்டவற்றை வீடு வாங்க கொடுத்துள்ளனர். அதன் பிறகு சீனிவாசன் வீடு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துப் பார்த்த நர்மதா இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இதன் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சீனிவாசன் பணம் செலுத்தி விடுவதாக உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்று பணத்தை செலுத்தாமல் மீண்டும் காலதாமதம் செய்து வந்துள்ளார். இதனால் நர்மதா மீண்டும் உயர்நீதிமன்றத் தில் மனுத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் சீனிவாசனை கைது செய்யும்படி கொடுங்கையூர் போலீசாருக்கு ஆணை பிறப்பித்தது. அதன் பேரில் கொடுங்கையூர் போலீசார் பெரம்பூர் சுப்பிரமணியம் தெரு பகுதியை சேர்ந்த சீனிவாசன் வயது 49 என்ற நபரை செய்தனர் கைது செய்யப்பட்ட சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion