CHN Power Shutdown Jun 25th: சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க மின்தடைன்னு தெரிஞ்சுக்கிட்டு உங்க பிளான போடுங்க.!
சென்னையில் நாளை(25.06.25) மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த தகவல்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

சென்னையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இதற்காக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டு வருகிறது.
நாளை(25.06.25) மின்தடை செய்யப்பட உள்ள இடங்கள்
சென்னையில் நாளை மின்தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்து மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பின்வரும் இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்
தாம்பரத்தில், சிட்லபாக்கம், ஆர்த்தி நகர், ஆனந்த புரம், வினோபா நகர், பேராசிரியல் காலனி, சிடலபாக்கம் 1-வது மெயின் ரோடு பகுதி, ராமசந்திரா ரோடு, ரங்கநாதன் தெரு, கண்ணதாசன் தெரு, அய்யாசாமி தெரு ஆகிய இடங்களில் நிளை மின்தடை செய்யப்பட உள்ளது.
பல்லாவரம்
சாவடி தெரு, ஐடிஎஃப்சி காலணி, ஜிஎஸ்டி ரோடு, பல்லாவரம் பஸ் ஸ்டாண்ட், சைதன்யா பள்ளி அருந்ததிபுரம், வள்ளுவர் பேட்டை, ரங்கநாதன் தெரு, கடப்பேர் துர்கா நகர் குடியிருப்பு வாரியம், வினோபா நகர், பாரதிதாசன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, தாகூர் தெரு, காமராஜர் தெரு, வள்ளலார் தெரு, காந்தி தெரு, காமாட்சி தெரு, கட்டபொம்மன் நகர், கோகுல் தெரு, திருமுருகன் நகர், திருவள்ளுவர் நகர், வசந்தம் நகர், பங்காரு நகர், விபி வைத்தியலிங்கம் சாலை, ஆர்கேவி அவென்யூ, அருள் முருகன் நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.
அடையாறு
அடையாறில், மல்லிப்பூ நகர் 1 முதல் 3-வது மெயின் சாலை, காந்தி நகர் பகுதியில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
கோட்டூர்புரம்
ஸ்ரீநகர் காலனி, தெற்கு மாட தெரு, மேற்கு மாட தெரு, வடக்கு மாட தெரு, தெற்கு அவென்யூ, கோவில் அவென்யூ, ரங்கராஜபுரம் 1 முதல் 6-வது தெரு வரை பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிவிப்பையடுத்து, சென்னையில் மேற்கண்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மின்தடைக்கு ஏற்றார்போல் தங்கள் வேலைகளை திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.





















