Chennai Power Shutdown; சென்னை மக்களே அலர்ட்.. நாளை (11.08.25) இங்கெல்லாம தான் மின் தடை.. முழு விவரம்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை (11-08-2025 ) மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை தற்போது தெரிந்துகொள்ளலாம்.

Chennai Power Shutdown: சென்னையில் பல்வேறு பகுதிகளில் நாளை திங்கட்கிழமை (11.08.2025) மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. மாதாந்திர மின் பராமரிப்பு பணி தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. கோவை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?
பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 மணி அல்லது 10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை, மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
பெசன்ட் நகர்: 7வது அவென்யூ
7வது அவென்யூ, 2. ருக்குமணி சாலையின் ஒரு பகுதி 3. டைகர் வரதாச்சாரி சாலையின் ஒரு பகுதி, 4. கங்கை தெருவின் ஒரு பகுதி, 5. அருண்டேல் கடற்கரை சாலையின் ஒரு பகுதி, 6. கடற்கரை சாலை 7 இன் ஒரு பகுதி, அண்ணா காலனியின் ஒரு பகுதி.
Before You Go
SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
ட்ரெண்டிங் செய்திகள்























