எண்ணெய் குளியல் நரம்பு மண்டலத்திற்கு மிகவும் நல்லது ஆகும். இது உடலின் சூட்டைத் தணிக்கிறது.
ஆயுர்வேத எண்ணெய் குளியல் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. உடலில் ஆங்காங்கே உள்ள வலிகள், தசைப்பிடிப்புகள் சீராகும்.
எண்ணெய் குளியல் சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி மேனி பளபளப்புக்கு உதவுகிறது.
எண்ணெய் குளியல் கூந்தலுக்கு நல்லது. தலையில் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும்.
எண்ணெய் குளியல் உடல் சூட்டைத் தணிப்பதால் கண் பார்வைக்கு நல்லது ஆகும். கண் பார்வை ஆரோக்கியத்திற்கு இந்த ஆயுர்வேத எண்ணெய் குளியல் உகந்தது.
நன்றாக உடலில் எண்ணெய் தேய்த்து குளித்து பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தால் உடலில் புத்துணர்ச்சி பிறக்கும்.
நோய் தொற்று, உடலில் உள்ள மூட்டு வலி போன்றவற்றை நீக்கி நம்மை ஆரோக்கிமாக வைத்திருக்கிறது.
இந்த எண்ணெய் குளியலால் பித்தம், கபம் போன்றவை உடலில் இருந்து நீங்குகிறது.