Chennai Power Cut: சென்னையில செப்டம்பர் 26-ம் தேதி எங்கெல்லாம் மின் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.?
Chennai Power Cut(26-09-2025): சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், செப்டம்பர் 26-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தாம்பரம்
புதுத்தாங்கல் முல்லை நகர் TNHB, ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர் ரோடு, பழைய தாம்பரம், படேல் நகர், இரும்புலியூர், வைகை நகர், சாய் நகர், டி.டி.கே நகர், பெரியார் நகர், கிருஷ்ணா நகர், குல்லக்கரை, டவுன் தாம்பரம், சிடிஓ காலனி, சக்தி நகர், கன்னடபாளையம், கிஷ்கிந்தா சாலை, புலிகொரடு, ரெட்டியார் பாளையம், கல்யாண் நகர், மேலண்டை தெரு, பாரதி நகர், குட்வில் நகர், வீரலட்சுமி நகர், காந்தி நகர், கண்ணன் அவென்யூ, குறுஞ்சி நகர், அமுதம் நகர், நித்யந்தா நகர், பெருமாள் தெரு, ஜோதி நகர்.
மாடம்பாக்கம்
அகரம் மெயின் ரோடு, மப்பேடு சந்திப்பு, பாரதிதாசன் தெரு, செயலக காலனி, வெங்கடமங்கலம் மெயின் ரோடு, திருவஞ்சேரி.
ரெட்ஹில்ஸ்
சோத்துபெரும்பேடு, நாரணம்பேடு, சோழவரம், கோட்டைமேடு, பெரிய காலனி, செம்புலிவரம், ஒரக்காடு சாலை.
ஆயிரம் விளக்கு
அண்ணாசாலை மதர்ஷா புலிடின் முதல் பாயிண்ட், கிரீம்ஸ் சாலை, அலி டவர், எம்ஆர்எஃப், ரங்கூன் தெரு முதல் பாயிண்ட், அண்ணா சாலை, மக்கிஸ் கார்டன், ஷஃபி முகமது சாலை, மெயின் அப்பல்லோ, கிரீம்ஸ் லேன், ஸ்பென்சர் பிளாசா மால்.
செம்பியம்
தணிகாசலம் நகர், சக்தி வேல் நகர், பிரபு தெரு, 80 அடி சாலை, சக்தி விநாயகர் கோயில் தெரு, மேரி எலியன் தெரு, அன்னல் காந்தி தெரு, தட்சிணாமூர்த்தி தெரு, ராமலிங்க காலனி, எம்பிஎம் தெரு, சுப்ரமணி நகர், கார் நகர், திருப்பூர் குமரன் தெரு, திரு.வி.க. தெரு, காமராஜ் நகர், ஆசிரியர் தெரு, நடேசன் தெரு, சீனிவாச நகர், செல்வம் நகர், காந்திமதி தெரு.
போரூர்
குன்றத்தூர் ரோடு, காரம்பாக்கம், மதனந்தபுரம், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, கெருகம்பாக்கம், முகலிவாக்கம், ராமாபுரம், சின்ன போரூர், கொளப்பாக்கம்.
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.





















