Chennai Metro Rail: சக்சஸ்.. சக்சஸ்.. புதிய மைல்கல்லை எட்டிய சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்..என்ன தெரியுமா?
Poonamalee-Porur metro: பூந்தமல்லி மற்றும் போரூர் இடையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமான பணியானது 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது

பூந்தமல்லி மற்றும் போரூர் இடையிலான 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் பாதையில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிக்கரமாக நடந்து முடிந்தது.
பூந்தமல்லி மெட்ரோ:
சென்னை மெட்ரோவின் , 2 ஆம் கட்ட மெட்ரோ பணியானது தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் பூந்தமல்லி மற்றும் போரூர் இடையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமான பணியானது 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. இந்த மெட்ரோ கட்டுமான பணி நிறைவடைந்து, வரும் டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று பூந்தமல்லி முதல் முல்லைநகர் வரை 2.5 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைப்பெறும் என்று கூறப்பட்டது.
சோதனை ஓட்டத்தில் தாமதம்:
ஆனால் சோதனை ஓட்டத்தின் போது மின் கம்பி அறுந்து விழுந்து தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதனால், உடனடியாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டமானது இயக்கமானது நிறுத்தம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, இப்பகுதியில் மின்சார கம்பியில் உள்ள பிரச்சனையை சரி செய்யும் முயற்சியில் தொழில்நுட்ப ஊழியர்கள் ஈடுப்பட்டனர்.
மீண்டும் சோதனை ஓட்டம்:
இந்த கோளாறை சரிசெய்த பின்னர் சோதனை ஓட்டமானது மீண்டும் தொடங்கி நடைப்பெற்றது, இது குறித்து மெட்ரோ ரயில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தில்வழித்தடம் 4-ல் பூந்தமல்லி பணிமனை மெட்ரோ நிலையம் முதல் முல்லை தோட்டம் மெட்ரோ நிலையம் வரைஇரண்டாம் கட்டப் பிரிவின் முதல் வழித்தட சோதனை மற்றும் மெட்ரோ இரயில் ஓட்டத்தைதொடங்கியுள்ளது.
Chennai Metro Rail Limited (CMRL) has commenced the TESTING AND TRIAL of its first Phase 2 section along with train , between Poonamallee Depot Metro Station and Mullai Thottam Metro Station in the Corridor 4 of the Phase-2 project.
— Chennai Metro Rail (@cmrlofficial) March 21, 2025
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட… pic.twitter.com/bbkEM8FTsc
மெட்ரோ அதிகாரிகள் தெரிவிக்கையில்..
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. மு.அ.சித்திக், இ.ஆ.ப., அவர்கள், "இரண்டாம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 4-ல் உயர்மட்ட வழித்தடத்தில் இன்று நடத்தப்பட்ட முதல்வழித்தட சோதனை இரண்டாம் கட்ட திட்டத்தின் முன்னேற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்” என்று கூறினார்.
அனைத்து சோதனைகளும் மேற்க்கொள்ளப்படும்:
இந்த உயர்மட்ட வழித்தடம் பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையத்திலிருந்து முல்லைத் தோட்டம்நிலையம் வரை சுமார் 3 கி.மீ. நீளம் கொண்டது, இது பூந்தமல்லி பணிமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சோதனை மற்றும் செயல்பாட்டுக்கு, பூந்தமல்லி பணிமனை இந்த பகுதியின் மெட்ரோஇரயிலுக்கான சோதனைகளை ஒருங்கிணைக்கும் மையமாக இருக்கும். படிப்படியாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில் வழித்தட சோதனைகளுக்குபுதிய பிரிவுகளைச் சேர்க்கும், இதன் மூலம் முதற்கட்டமாக பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதிசெய்வதற்கான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

