சென்னைக்கு ஹேப்பி நியூஸ்.. 5 வகை விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்.. என்னென்ன தெரியுமா ?
"5 வகையான விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறைக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்"

போக்குவரத்து துறை போலீசார் அதிக அளவு அபராதம் விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. குறிப்பாக காவல்துறையினர் வாகனங்கள் நிறுத்தி வைக்கும் இடங்களுக்கு, சென்று புகைப்படம் எடுத்துக் கொள்வதாகவும், அதன் பிறகு ஒரு சில நாட்கள் கழித்து அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
இதனால் தவறு செய்யாத நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுவதாகவும், புகார்கள் இருந்து வந்தன. குறிப்பாக போக்குவரத்து போலீசார் கும்பலாக நின்று கொண்டு வாகன ஓட்டிகளிடம் கெடுபிடி காட்டி அபராதம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
அதிரடி உத்தரவு பிறப்பித்த சென்னை ஆணையர்
இந்தநிலையில், சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் காவல் போலீசார் 5 வகை விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சென்னை ஆணையர் குறிபபானை அனுப்பியுள்ளார் . காவல்துறைக்கு அனுப்பப்பட்ட உள்ள சுற்று அறிக்கையில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் வழக்கு பதிவு செய்யும்போது 5 முக்கிய விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை நாள் ஒன்றுக்கு 2000 முதல் 3000 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில்தான் காவல்துறையினருக்கு இந்த அறிவுறுத்தலை காவல் ஆணையர் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
எந்தெந்த விதிமீறல்களுக்கு அபராதம் ?
1. இருசக்கர வாகனத்தில் ஒரே நேரத்தில் மூன்று பேர் பயணித்தால் அபராதம் விதிக்கலாம்.
2. தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கலாம்.
3. தவறான திசையில் இரு சக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகனங்களில் செல்லுதல் ஆகியோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
4. ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கலாம்.
5. மது போதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கலாம்.
அதிவேகமாக வாகனம் இயக்குபவர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை எச்சரிக்கை கொடுக்கப்படும் எனவும், மீண்டும் மீண்டும் அதே தவறை செய்பவர்களுக்கு தண்டனைகள் கடுமையாக இருக்கும் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்த விவகாரத்தில் பொதுமக்களும் விழிப்புணர்வுடன், வாகனங்களை இயக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்த கொடுத்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





















