மேலும் அறிய
Advertisement
ராணுவவீரர் வீட்டில் புகுந்து 10க்கும் மேற்பட்ட ரவுடிகள் தாக்குதல் - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
தங்கையான மாரியிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக பத்துக்கும் மேற்பட்ட ரவுடிகளை கொண்டு ராணுவ வீரர் ஜோதிலிங்கத்தின் தாயாரான மீனா அவரது கணவர் மற்றும் அவரது சகோதரர் மீது தாக்குதல்
சென்னை மணலி சேலைவாயில் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜோதிலிங்கம் (26). இவர் அந்தமானில் உள்ள ராணுவ தளத்தில் பணியாற்றி வருகிறார். இவரது தாயார் மீனா (42) கடந்த 14 ஆம் தேதி ராமநாத மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்ற போது தனது கணவர் பிலிங்கின், தங்கையான மாரியிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக பத்துக்கும் மேற்பட்ட ரவுடிகளை கொண்டு ராணுவ வீரர் ஜோதிலிங்கத்தின் தாயாரான மீனா அவரது கணவர் மற்றும் அவரது சகோதரர் மூன்று பேரும் தாக்கப்பட்டனர்.
இதில் அவரது சகோதரர் காயம் அடைந்தார். இதையடுத்து அவரது தாயார் மீனா காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மணலி காவல் துறையினர் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் மீனா அவரது மகனுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து ராணுவ உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சென்னையில் இருந்து ராணுவ அதிகாரி ஒருவர் மணலி காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவித்தனர். எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் வீட்டில் புகுந்து ரவுடிகள் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போதை பழக்கத்தை தடுக்க ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் காவல்துறை
வட சென்னை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் செல்லும் அனைத்து வாகனங்களிலும் , போதை பழக்கத்தை ஒழிக்கவும் தடுப்பு பிரச்சார ஸ்டிக்கரை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய வண்ணாரப்பேட்டை காவல் துறை துணை ஆணையர்
சென்னை பெருநகர காவல் துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ் அவர்கள் உத்தரவின் பேரில் போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை காவல்துறையினர் ஈடுபட்டனர். சென்னை முழுவதும் போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கையாக காவல் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில் பல இடங்களில் கஞ்சா போதை, மாத்திரை, குட்கா, உள்ளிட்டவைகளை பள்ளி மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை பயன்படுத்தி சீரழித்து வருவதை தடுக்கும் விதத்திலும் போதை காரணமாக சில இளைஞர்கள் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற செயல்கள் அதிகரித்து வரும் காரணத்தினால் குற்றச் செயல்களை குறைக்க காவல் துறை சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் அனைத்து காவல் நிலையங்கள் சார்பில் நடத்தப்பட்டது.
இதில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவ பிரசாத் ஐ.பி.எஸ் வண்ணாரப்பேட்டை பேருந்து நிலையம் அருகே ஆட்டோக்கள் , இரு சக்கர வாகன ஓட்டிகள் , பேருந்துகள் ஆகியவைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டி பொது மக்களுக்கு பிரச்சாரம் செய்தனர். இதில் வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் இருதயம் மற்றும் வண்ணாரப்பேட்டை ஆய்வாளர் பிராவின் டேனி , ஆகியோர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதே போல் ஆர்.கே.நகர் கே.என்.எஸ் டிப்போ அருகே துணை ஆணையர் தலைமையில் ஆர்.கே.நகர் ஆய்வாளர் ரவி ஆகியோர் ஆட்டோக்கள் இருசக்கர வாகனங்கள் லாரிகளில் ஸ்டிக்கர்களை ஒட்டி வாகன ஓட்டிகளுக்கு போதை விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்தனர். அப்போது காவலர்கள் போதை தடுப்பு பதாகைகளை கையில் ஏந்தி வரிசையாக நின்றனர். இதில் ஏராளமான பொதுமக்களும் காவல் துறையினரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion