Chennai Metro Ticket: பயணிகளே.. சென்னை மெட்ரோவில் நாளை முதல் வாட்ஸ் அப்பிலே டிக்கெட் எடுக்கலாம்..! எப்படி?
Chennai Metro Whatsapp Ticket Booking: சென்னை மெட்ரோ இரயில்களில் பயணிக்க வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட் எடுக்கும் நடைமுறை நாளை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
சென்னை மெட்ரோ இரயில்களில் பயணிக்க வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட் எடுக்கும் நடைமுறை நாளை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
வாட்ஸ் அப் மூலம் டிக்கெட்:
போக்குவரத்து நெரிசைக் குறைக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள நகரங்களில் மெட்ரோ இரயில் சேவை செயல்பாட்டில் உள்ளது. மெட்ரோ ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதியாக ஸ்மாட்ஃபோனில் வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இருந்த இடத்திலேயே இருந்தப்படி, அதாவது மெட்ரோ நிலையத்திற்கு செல்லாமலேயே பயண டிக்கெட்டை பதிவு செய்யும் வசதியை சென்னை மெட்ரோ நிர்வாகம் நாளை (17.05.2023) அறிமுகம் செய்கிறது.
சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயணிகளின் வசதிக்காக நேரடி பயணச் சீட்டை பெற்றுக் கொள்ளும் முறை, பயண அட்டை, க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி பயணிக்கும் முறை ஆகியவைகள் அறிமுகம் செய்யப்பட்டன.
புதிய வசதி:
இந்நிலையில், மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட் எடுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள மெட்ரோ ரயில்வே நிர்வாகத்துடன் மெட்டா நிறுவனம் இணைந்து, வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் எளிதாக மெட்ரோ ரயில் டிக்கெட்டை புக் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது சில நகரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எப்படி டிக்கெட் பெறுவது?
- சென்னை மெட்ரோ நிறுவனத்தின் பொதுவான கைப்பேசி எண் பயணிகளுக்கு வழங்கப்படும். இந்த எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலம் (Hi) ஹாய் என்று அனுப்ப வேண்டும்.
- பின்னர், சார்ட் பாட் என்ற தகவல் வரும்.
- அதில் டிக்கெட் எடுப்பது தொடர்பான தகவல்கள் இடம் பெற்றிருக்கும். பயணியின் பெயர், புறப்படும் மெட்ரோ இரயில் நிலையம், சேரும் ரயில் நிலையம் ஆகியவற்றை பதிவுசெய்து, வாட்ஸ் அப், மூலமோ அல்லது ஜி-பே மூலமாகவோ பணம் செலுத்தினால் போதும்.
- பயண டிக்கெட் வாட்ஸ்-அப் எண்ணிற்கு வந்துவிடும்.
- இந்த டிக்கெட்டை ரயில் நிலைய நுழைவு வாயிலில் உள்ள க்யூ-ஆர் கோடு ஸ்கேனரில் காண்பிப்பதன் மூலம் மெட்ரோ ரயில் பயணத்தை மேற்கொள்ள முடியும்.
- பயணம் முடிந்து, சென்று சேர வேண்டிய இடம் வந்ததும், அங்குள்ள மெசினில் க்யூ-ஆர் கோர் ஸ்கேனரில் டிக்கெட்டை காண்பித்டால் வெளியே செல்ல முடியும்.
சென்னை மெட்ரோ இரயில் சேவை
சென்னை போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்கள் சாலை வழியான பயணத்திற்கு மாற்றாக மெட்டோ இரயிலில் பயணிப்பதை தேர்வு செய்கின்றனர்.
மெட்ரோ இரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது.
மெட்ரோ டிராவல் கார்டு
மெட்ரோ ரயிலில் மக்கள் அதிகம் பயணிக்கும் நேரங்களில் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருப்பதை தடுக்க பயணிகள் மெட்ரோ கார்டுகளை பயன்படுத்தலாம். ரூ. 50 டெபாசிட் தொகை செலுத்தி (Non Refundable) மெட்ரோ கார்டுகளை பெறலாம். இதில் அதிகப்பட்ச தொகையாக உங்கள் விருப்பப்படி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மெட்ரோ கார்டை பயன்படுத்தி பயணிக்கலாம்.