மேலும் அறிய

Chennai Metro Train: நவம்பரில் இத்தனை லட்சமா? மெட்ரோ ரயிலில் ஜெட் வேகத்தில் உயரும் பயணிகள் எண்ணிக்கை

Chennai Metro Train:கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 80 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 80 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதத்தில் 80 லட்சத்து 01,210 பயணித்துள்ளனர். அதிகபட்சமாக நவம்பர் 10-ம் தேடி 3,35,677 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளதாக நிர்வாகம் சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் பயணிகள் எண்ணிக்கை

சென்னை நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பெரும்பாலான மக்களின் தேர்வாக இருப்பது மெட்ரோ ரயில் சேவை. சென்னையில் பயணத்திற்கு மெட்ரோ ரயிலை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்படுள்ளது. 

இந்தாண்டு ஜூலை மாதத்தை விட ஆகஸ்டு மாதத்தில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 215 பயணிகள் மெட்ரோ ரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும் ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 85.89 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த மாதம் 80 லட்சம் பேர் பயணத்துள்ளதாக நிர்வாகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும், அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மக்களுக்கான சேவைகளை மேம்படுத்தும் நோக்கத்திலும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. 

 நவம்பர் மாதத்தில் மட்டும் க்யு.ஆ.ர். குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 32 லட்சத்து 33 ஆயிரத்து 705 பயணிகள் (Online QR 1,99,218; Static QR 1,46,485; Paper QR 24,37,942; Paytm 2,34,981; Whatsapp 2,11,758; PhonePe 3,321), பயண அட்டைகளை (Travel Card Ticketing System)  39,98,883 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 56,505 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 3,769 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 7 லட்சத்து 8 ஆயிரத்து 351 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் சலுகை

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91- 83000 86000 ) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

Chennai Metro Train: நவம்பரில் இத்தனை லட்சமா? மெட்ரோ ரயிலில் ஜெட் வேகத்தில் உயரும் பயணிகள் எண்ணிக்கை

7 நிமிட இடைவெளியில் ரயில் சேவை

அதிகரித்து வரும் மெட்ரோ இரயில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மற்றும் அவர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும் இரண்டு வழித்தடங்களிலும் நெரிசல் மிகு நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவை கடந்த மாதம் 27 -ம் தேதி முதல் (27.11.2023) முதல் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் கடந்த சில நாட்களாக பெரும் மழை பெய்து வருது. மக்களின் வசதிக்கு ஏற்ப நெரிசல்மிகு நேரங்களில் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

Chennai Metro Train: நவம்பரில் இத்தனை லட்சமா? மெட்ரோ ரயிலில் ஜெட் வேகத்தில் உயரும் பயணிகள் எண்ணிக்கை

மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 'Peak Hours' 5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது.

ஏற்கனவே இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வரும் நிலையில், மாதவரம்-சிறுசேரி, பூந்தமல்லி-கலங்கரை விளக்கம், மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடங்களில் மெட்ரோ பயணிகள் நடந்து வருகிறது. சென்னை மாநகரம் முழுவதும் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பயணிகள் நிறைவடைந்தால் மெட்ரோ இரயிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது.

Chennai Metro Train: நவம்பரில் இத்தனை லட்சமா? மெட்ரோ ரயிலில் ஜெட் வேகத்தில் உயரும் பயணிகள் எண்ணிக்கை

ரூ.5 பயணம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதன் நிறுவன நாளை கொண்டாடும் வகையில் சிறப்பு ஒரு நாள் சலுகையை அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 3 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), பே.டி.எம்., வாட்ஸ்அப் அல்லது ஃபோன்பே,  ஒற்றை பயண இ-க்யூ.ஆர். பயணச் சீட்டுகளை வாங்கும் பயணிகள் ஆகியோருக்கு  ரூ.5 என்ற பயணக் கட்டண சலுகையை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சிங்கார சென்னை அட்டை, மெட்ரோ பயண அட்டை, சி.எம்.ஆர்.எல். மொபைல் ஆப் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூ.ஆ.ர். ஆகிய பயணச் சீட்டுகளுக்கு இச்சலுகை பொருந்தாது என்று மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget