Chennai Metro Rail: இப்படியெல்லாம் பண்ணாதீங்க! ரூ.5,000 வரை அபராதமாம் - வார்னிங் கொடுத்த சென்னை மெட்ரோ
விதிகளை மீறும் பயணிகளுக்கு 4 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ தெரிவித்துள்ளது.
Chennai Metro Rail: விதிகளை மீறும் பயணிகளுக்கு 4 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ:
சென்னையில் உள்ள போக்குவரத்துகளில் மிகவும் முக்கியமானது இந்த மெட்ரோ ரயில் சேவை. நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் நிலவும் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது.
அதேபோல், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மறு வழித்தடமும் உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 85.89 லட்சம் பயணிகள் பயணித்தனர் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்திருந்தது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்கான பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது.
சென்னை மெட்ரோ எச்சரிக்கை:
இந்நிலையில், நெரிசல் மிகு நேரங்களில் ஒரு சில ரயில்களில் பயணிகளுக்கு இடையே மோதல், ரயில் கதவுகளை மூடவிடாமல் காலால் தடுப்பது போன்ற செயல்களில் பயணிகள் ஈடுபவதாக புகார் எழுந்தது. மேலும், கடைசி நேரத்தில் ரயிலை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ன எண்ணத்தில் தானியங்கி கதவுகள் மூட்டப்பட்டவுடன் அதனை திறக்க பயணிகள் முயற்சிப்பது, தானியங்கி கதவுகள் மூடப்படும் போது கையில் வைத்திருக்கும் பொருட்களை தூக்கி வீசி கதவுகளை மூடாமல் தடுப்பது போன்ற ஆபத்தான செயல்களில் பயணிகள் ஈடுபடுகின்றனர். இதனால், பீக் ஹவரில் மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை இயக்கப்படும் ரயில் சேவை பாதிக்கப்படுவாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
அபராதம் முதல் சிறை:
இதுபோன்று ஆபத்தான செயல்களில் பயணிகள் ஈடுபடுவதால் சென்னை மெட்ரோ நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புச் சட்டம் 2002 பிரிவு 67-ன் கீழ் ரயிலின் கதவுகளை மூடவிடாமல் தடுப்பது, சிரமத்தை ஏற்படுத்துவது போன்ற ரயிலின் இயக்கத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு நான்கு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
மேலும், சென்னை மெட்ரோ ரயில்களின் இயக்கத்தை தடுப்பது, சிரமம் ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் வாடிக்கையாளர் உதவு எண் 1860-425-1515 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
மேலும் படிக்க
ஊழல் வழக்கில் போலீஸ் கஸ்டடி.. உச்ச நீதிமன்றத்தை நாடிய சந்திரபாபு நாயுடு.. அடுத்து என்ன?
இந்திய மொழிகளில் சட்டங்களை இயற்ற முழுமனதுடன் முயற்சி செய்கிறோம்: மனம் திறந்த பிரதமர் மோடி