மேலும் அறிய

Marina Blue Flag Beach: புதிய வசதிகளுடன் மெரினா.. நீலக்கொடி கடற்கரையின் 2வது கட்டம் திறப்பு எப்போது? தாமதம் ஏன்?

Marina Blue Flag Beach Opening Date: சென்னை மெரினா கடற்கரையில் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட, நீலக்கொடி கடற்கரையின் 2வது கட்டம் எப்போது திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Marina Blue Flag Beach Opening Date: நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் சென்னை மெரினா கடற்கரையில் இடம்பெற்றுள்ள வசதிகள் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

மெரினா நீலக்கொடி கடற்கரை - எப்போது திறப்பு?

சென்னை மெரினாவில் நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ள இரண்டாவது பகுதி, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வரும் பிப்ரவரி 22ம் தேதி திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வரும் பிப்ரவரி 17ம் தேதி நடைபெறவிருந்த நிகழ்ச்சியானது, சற்றே தாமதம் ஆகியுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சியின் பொறியாளர் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. ஒரு சில சிறிய பணிகள் இன்னும் நிலுவையில் இருப்பதால இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தாமதத்திற்கான காரணம் என்ன?

வெளியாகியுள்ள தகவலின்படி, ”கடற்கரையின் குறிப்பிட்ட பகுதியில் அமைக்கப்பட்டு வரும் குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி இன்னும் முழுமையடையவில்லையாம். முதலில் இரண்டு விளையாட்டு பகுதிகள் மட்டுமே அமைக்கப்பட்டு இருந்ததாகவும், மாநாகராட்சி ஆணையரின் அறிவுறுத்தலின் பேரில் அந்த எண்ணிக்கை நான்காக உயர்த்தப்பட்டதாகவும்” இந்த கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. மேலும், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான, சிலையை நிறுவுவதற்கான பணிகளும் நடைபெற்ற வண்ணமே உள்ளன. இதன் விளைவாகவே திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாம்.


Marina Blue Flag Beach: புதிய வசதிகளுடன் மெரினா.. நீலக்கொடி கடற்கரையின் 2வது கட்டம் திறப்பு எப்போது? தாமதம் ஏன்?

ரூ.7 கோடி செலவில் விரிவாக்க பணிகள்

சர்வதேச தரத்திலான நீலக்கொடி கடற்கரை அந்தஸ்தை எட்டுவதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், ரூ.7 கோடி செலவில் விவேகானந்தர் இல்லத்திற்கு எதிரே மெரினாவில் இந்த திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல்கட்டத்தில் இருந்ததை காட்டிலும் அகலமான மணற்பரப்பை உள்ளடக்கி இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர் அனுபவத்தை மேம்படுத்த, விசாலமான கடற்கரை காட்சியை வழங்குவதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாம்.


Marina Blue Flag Beach: புதிய வசதிகளுடன் மெரினா.. நீலக்கொடி கடற்கரையின் 2வது கட்டம் திறப்பு எப்போது? தாமதம் ஏன்?

புதிய வசதிகள் என்ன?

மூங்கில் கட்டைகளால் செய்யப்பட்ட 60 இருக்கைகள், 30 நிழற்குடைகள் உடன்,  4 கண்காணிப்பு கோபுரங்கள், குழந்தைகளுக்கான 4 விளையாட்டு மையங்கள், படிப்பதற்கான 2 மையங்கள் மற்றும் 2 செல்ஃபி பாயிண்ட்கள் ஆகியவை நிறுவப்படுகின்றன. இதுபோக ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில், இங்கு மூங்கில் கட்டைகளால் ஆன குப்பை தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.

20 ஏக்கர் பரப்பளவிலான நீலக்கொடி கடற்கரை..

முன்னதாக, சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ரூ.7.34 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் முதற்கட்ட பகுதியை, கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம் திறந்துவைக்கப்பட்டது. அதில் 20 மூங்கில் நிழற்குடைகள், 40 நாற்காலிகள் மற்றும் அமர்வதற்கான 12 பெஞ்ச்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தியான மையம்,  மாற்றுதிறனாளிகளுக்கான 12 சக்கர நாற்காலிகள், கடற்கரையை எளிதில் அணுக பிரத்யேக தளத்துடன் கூடிய வழி ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.

4 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து சிசிடிவி கேமரா மூலம் பாதுகாப்பை உறுதி செய்யப்படுகிறது. முதலுதவி மையம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, கழிவறைகள் மற்றும் குளியலறை என பல வசதிகள் இங்கு இடம்பெற்றுள்ளன. இங்கே உள்ளே நுழைவதற்கான அனுமதி இலவசமாக இருந்தாலும், சில வசதிகளை அணுக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


Marina Blue Flag Beach: புதிய வசதிகளுடன் மெரினா.. நீலக்கொடி கடற்கரையின் 2வது கட்டம் திறப்பு எப்போது? தாமதம் ஏன்?

நீலக்கொடி கடற்கரையின் முக்கியத்துவம்..

நீலக் கொடி கடற்கரை என்பதுசுற்றுச்சூழல் மேலாண்மை, பாதுகாப்பு, நீர் தரம் மற்றும் கல்வி ஆகியவற்றிற்கான உயர் தரங்களை பூர்த்தி செய்யும் கடற்கரைகள் மற்றும் நிலையான சுற்றுலா படகுகளுக்கு வழங்கப்படும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அடையாளமாகும். இந்த சான்றிதழைப் பெற குறிப்பிட்ட பகுதியானது நான்கு முக்கிய பிரிவுகளில் 33 குறிப்பிட்ட விதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் நீர் தரம், சுற்றுச்சூழல் மேலாண்மை, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பாதுகாப்பு.  இந்தியாவில் 15-க்கும் மேற்பட்ட நீலக் கொடி சான்றளிக்கப்பட்ட கடற்கரைகள் உள்ளன. அதில் தமிழ்நாட்டின் கோவளம் கடற்கரையும் அடங்கும். இதனை மேலும் விரிவுபடுத்தும் வகையிலேயே மெரினா கடற்கரையை மேம்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

Frequently Asked Questions

மெரினா நீலக்கொடி கடற்கரை எப்போது திறக்கப்படும்?

மெரினா கடற்கரையின் மேம்படுத்தப்பட்ட இரண்டாவது பகுதி, பிப்ரவரி 22 ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட வாய்ப்புள்ளது. சில பணிகள் நிலுவையில் இருப்பதால் திறப்பு தேதி தாமதமாகியுள்ளது.

திறப்பு விழா தாமதமானதற்கான காரணம் என்ன?

குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி முழுமையடையாததாலும், கல்வி தொடர்பான சிலைகள் நிறுவப்படுவதாலும் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரூ.7 கோடி செலவில் என்னென்ன விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?

விவேகானந்தர் இல்லத்திற்கு எதிரே, அகலமான மணற்பரப்புடன் சர்வதேச தரத்திற்கேற்ப இரண்டாம் கட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளன. பார்வையாளர் அனுபவத்தை மேம்படுத்த இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய நீலக்கொடி கடற்கரையில் என்னென்ன வசதிகள் உள்ளன?

60 மூங்கில் இருக்கைகள், 30 நிழற்குடைகள், 4 கண்காணிப்பு கோபுரங்கள், 4 விளையாட்டு மையங்கள், 2 படிக்கும் மையங்கள், 2 செல்ஃபி பாயிண்ட்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதிகள் உள்ளன.

நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் எதைக் குறிக்கிறது?

நீலக்கொடி சான்றிதழ் என்பது சுற்றுச்சூழல் மேலாண்மை, பாதுகாப்பு, நீர் தரம் மற்றும் கல்வி ஆகியவற்றில் உயர் தரங்களை பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு வழங்கப்படும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட அடையாளமாகும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
Chennai Power Cut: சென்னைல ஜூலை 25-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னைல ஜூலை 25-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
" நான் ஒருத்தர கொலை பண்ணிட்டேன் " நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்த நபர்
மக்களே ரெடியா இருங்க! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் இன்று மாலை செம்ம ட்விஸ்ட்... வானிலை மையம் திடீர் எச்சரிக்கை!
மக்களே ரெடியா இருங்க! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் இன்று மாலை செம்ம ட்விஸ்ட்... வானிலை மையம் திடீர் எச்சரிக்கை!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
Samsung Silicon-Carbon Battery: சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Embed widget