(Source: ECI/ABP News/ABP Majha)
Chennai Rains: இரவெல்லாம் ஜில்ஜில்! மிதமான மழையால் குளுகுளுவென மாறிய சென்னை! தொடரும் மழை!!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது
சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் நேற்று இரவு முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு முதல் லேசானது முதல் மிதமான மழை வருகிறது.
அதன்படி, அடையாறு, நந்தனம், ஆயிரம் விளக்கு, ஆலந்தூர், சென்ட்ரல், மாம்பலம், புரசைவாக்கம், பெசன்ட் நகர், குரோம்பேட்டை, கே.கே.நகர், கோட்டூர் புரம், சைதாப்பேட்டை,கிண்டி, கேகேநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதேபோல, சென்னை அடுத்த புறநகர் பகுதியான பூந்தமல்லி, ஆவடி, ஐயப்பன் தாங்கல், பட்டாபிராம், திருநின்றவூர், மதுரவாயல், போரூர், ராமாபுரம், செம்பரம்பாக்கம் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
24.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ஈரோடு, டெல்டா மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
25.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
26.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
27.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
சென்னையை பொறுத்தவரை:
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.