மேலும் அறிய

அட இதுதான் வேணும்.. மகிழ்ச்சியில் விமான பயணிகள்.. பயன்பாட்டிற்கு வந்தது ' பாஸ்ட் ட்ராக் '

பயணிகள் உடமைகளை, பாதுகாப்பு சோதனைகள் நடத்தி, விமானத்தில் ஏற்றுவதற்கு, நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல், தானியங்கி இயந்திரங்கள் மூலம், உடனடியாக விமானங்களில் ஏற்றுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் டெர்மினல் 4, புறப்பாடு பகுதியில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்தாரா ஏர்லைன்ஸ், விமான பயணிகளுக்கு அதி நவீன கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. வெகு விரைவில் ஏர் இந்தியா பயணிகள் விமானத்திற்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

பாஸ்ட் ட்ராக்

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் டெர்மினல் 4 -லிருந்து புறப்படும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்தாரா ஏர்லைன்ஸ், விமானங்களின் பயணிகளுக்கு, சென்னை விமான நிலையத்தில் தற்போது பாஸ்ட் ட்ராக் எனப்படும், self package drop (SBD) என்ற புதிய திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதன்படி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான பயணிகள், தங்களுடைய உடமைகளை, பயணிகளே தானியங்கி இயந்திரங்கள் மூலம், ஸ்கேன் செய்து பரிசோதித்து, கண்வெயர் பெல்ட் மூலம், விமானத்தில் ஏற்றுவதற்கு அனுப்பி வைக்கலாம். 


அட இதுதான் வேணும்.. மகிழ்ச்சியில் விமான பயணிகள்.. பயன்பாட்டிற்கு வந்தது ' பாஸ்ட் ட்ராக்

இதற்காக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், புறப்பாடு பகுதி டெர்மினல் 4 இல், 8 பாதுகாப்பு சோதனை தானியங்கி கவுன்டர்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த கவுன்டர்களில், ஊழியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இயந்திரங்கள் மட்டும் இருக்கும்.

தானியங்கி முறை

பயணிகள் அந்த இயந்திரத்தில் தங்களுடைய உடைமைகளை வைத்து விட்டு, தங்களின் பயண டிக்கெடின் பி.என்.ஆர் எண்ணை பதிவு செய்ய வேண்டும். தானியங்கி முறையில், பயணிகளுக்கு போர்டிங் பாஸ் வரும். பயணி அந்த போர்டிங் பாஸை எடுத்து, அங்குள்ள மற்றொரு இயந்திரத்தில் ஸ்கேன் செய்ய வேண்டும். உடனடியாக அந்த உடைமைகளில், பாதுகாப்பு காரணங்களுக்காக, என்னென்ன பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்ற விவரங்கள், இயந்திரத்தின் டிஸ்ப்ளேவில் தெரியும். அதைப் பார்த்துவிட்டு, பயணி, அந்த இயந்திரத்தில் உள்ள பட்டன் மூலம் ஓகே கொடுக்க வேண்டும். 

தானாக நடைபெறும்

அதோடு தான் எடுத்துச் செல்லும் உடைமைகளின் எண்ணிக்கை குறித்தும் பதிவு செய்ய வேண்டும். அந்த தானியங்கி இயந்திரம், பயணியின் உடமைகளின் எடையை ஸ்கிரீனில் காட்டும். இதை அடுத்து பயணிகள் உடைமைகளில் ஒட்டுவதற்கான டேக்குகள், இயந்திரத்தில் இருந்து வெளியே வரும். பயணி அந்த டேக்குகளை எடுத்து தங்கள் உடைமைகளில் ஒட்டுவதோடு, அதன்பின்பு உடமைகளை, அருகே உள்ள கன்வயர் பெல்டில் வைத்துவிட்டால், பயணியின் உடைமைகள் விமானத்தில் ஏற்றுவதற்கு, தானாகவே கொண்டு செல்லப்படும். 

செல்ஃப் பேக்கேஜ் ட்ராப்ட்...

இந்த புதிய முறை மூலம், பயணிகள் போர்டிங் பாஸ் வாங்குவது, மற்றும் தங்கள் உடமைகளை பாதுகாப்பு சோதனைகள் நடத்தி, விமானத்தில் ஏற்றுவதற்கு, அனுப்பி வைப்பது போன்றவைகளுக்காக, நீண்ட வரிசையில், நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. அதிக சீக்கிரத்தில் அப்பணிகளை முடித்துவிட்டு, பயணிகள் விமானங்களில் ஏறுவதற்கு தயாராகி விடலாம். இதனால் இந்த புதிய திட்டத்திற்கு பாஸ்ட் ட்ராக் செல்ஃப் பேக்கேஜ் ட்ராப்ட் (எஸ் பி டி) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் டெர்மினல் 4 உள்நாட்டு முனையத்தில், தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு மட்டும் இந்த புதிய முறை அமுல் படுத்தப்பட்டிருந்தாலும், அடுத்த சில தினங்களில் ஏர் இந்தியா பயணிகள் விமானத்துக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.‌


அட இதுதான் வேணும்.. மகிழ்ச்சியில் விமான பயணிகள்.. பயன்பாட்டிற்கு வந்தது ' பாஸ்ட் ட்ராக்

இதனால் பயணிகள் நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டியதில்லை என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இந்த அதிநவீன திட்டம் ஏற்கனவே சென்னை உள்நாட்டு விமான நிலையம், டெர்மினல் 1 புறப்பாடு பகுதியில், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகளுக்கு, இந்த நவீன திட்டம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதியில் இருந்து, அமுலில் இருந்து வருகிறது.

தலைப்பு செய்திகள்

“100% பாஸ் பண்ணா பிளைட் ஏறுவீங்க!” - சென்னை பள்ளியின் மாஸ் சர்ப்ரைஸ்... வாயடைத்துப்போன மாணவர்கள்!
100% பாஸ் பண்ணா பிளைட் ஏறுவீங்க! - சென்னை பள்ளியின் மாஸ் சர்ப்ரைஸ்... வாயடைத்துப்போன மாணவர்கள்!
" கள்ளக் காதலை கைவிடாத தாய் " கஞ்சா போதையில் மகன் செய்த கொடூர காரியம்
பெண் பயணி உள்ளாடைக்குள் மறைத்து வைத்த அதிர்ச்சிப்பொருள்! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
பெண் பயணி உள்ளாடைக்குள் மறைத்து வைத்த அதிர்ச்சிப்பொருள்! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
Embed widget