சென்னை ஏர்போர்ட்டில் இருந்து வந்த ஹேப்பி நியூஸ்.. நன்றி தெரிவிக்கும் பயணிகள்..
இலவச பேட்டரி வாகனங்கள், எண்ணிக்கை ஒன்பதில் இருந்து, 22 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக இயக்கப்பட்டு வரும், இலவச பேட்டரி வாகனங்கள், எண்ணிக்கை ஒன்பதில் இருந்து, 22 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான பயணிகள், சர்வதேச முன்னையத்திற்கு செல்வதற்கும், சர்வதேச விமான பயணிகள் உள்நாட்டு முன்னையத்திற்கு செல்வதற்கும், இரு முனையங்களை சேர்ந்த பயணிகள், விமான நிலைய வளாகத்திற்குள் உள்ள, மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்வதற்கும், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக, இலவச பேட்டரி வாகனங்களை, இந்திய விமான நிலைய ஆணையம் இயக்கி வருகிறது. கடந்த ஜூலை மாதம் வரை, இந்த பேட்டரி வாகனங்கள், இவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன.
விமான நிலையத்தில் கொண்டு வந்த மாற்றங்கள்
இதனிடையே ஆகஸ்ட் மாதம் முதல், உள்நாட்டு முனையம் வருகை பகுதி அருகே இருந்த பிக்கப் பாயிண்ட்டை, அந்த இடத்தில் இருந்து எடுத்து, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள, மல்டி லெவல் கார் பார்க்கிங் பகுதிக்கு, விமான நிலைய நிர்வாகம் மாற்றிவிட்டது. எனவே இந்த பேட்டரி வாகனங்கள், பயணிகளை ஏற்றிக் கொண்டு மல்டிலெவல் கார் பார்க்கிங் பகுதிக்கும்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால் சென்னை விமான நிலையத்தில், 9 பேட்டரி வாகனங்கள் மட்டுமே இருந்ததால், அது போதுமானதாக இல்லை. எனவே பயணிகள் பேட்டரி வாகனங்களுக்காக நீண்ட நேரம், வரிசையில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் விமான பயணிகள் பலர், உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்களில் இருந்து, பிக்கப் பாயிண்ட் பகுதிக்கு, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல்,உடமைகளுடன் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
கூடுதல் பேட்டரி வாகனங்கள்
இதை அடுத்து பயணிகள் சமூக வலைதளங்கள் மூலமாக, இதை கடுமையாக கண்டித்து, தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அதோடு கூடுதலாக பேட்டரி வாகனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலையத்திற்கு, பயணிகள் வசதிக்காக மேலும், 13 பேட்டரி வாகனங்களை புதிதாக வாங்கியுள்ளது. இதை அடுத்து நேற்று முதல், சென்னை விமான நிலையத்தில், 22 பேட்டரி வாகனங்கள் பயணிகள் வசதிக்காக இயங்கத் தொடங்கியுள்ளன.
இதனால் மல்டிலெவல் கார் பார்க்கிங் பகுதியில் உள்ள பிக்கப் பாயிண்ட் செல்லும் பயணிகள் மற்றும் உள்நாட்டு முனையத்தில் இருந்து சர்வதேச முனையம், சர்வதேச முனையத்தில் இருந்து உள்நாட்டு முனையம் செல்லும் டிரான்சிட் பயணிகள், மேலும் மெட்ரோ ரயில் முனையம் செல்லும் பயணிகள் ஆகியோருக்கு மிகுந்த வசதியாக இருக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
பயணிகளுக்கு இருக்கும் சிரமங்கள் என்ன ?
ஆனாலும் இப்போதும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால், பேட்டரி வாகனங்களில் ஏறுவதற்கு நீண்ட வரிசைகளில், பயணிகள் காத்து நின்று தான் ஏற வேண்டியது இருக்கிறது. அவ்வாறு காத்து நின்று பேட்டரி வாகனத்தில் ஏறி, மல்டி லெவல் கார் பார்க்கிங் பகுதிக்கு சென்றாலும், அங்கிருந்து இரண்டாவது, மூன்றாவது தளத்திற்கு,உடமைகளுடன் பயணிகள் லிப்டில் ஏறி, மிகுந்த சிரமப்பட்டு, பிக்கப் பாய்ண்டிற்கு செல்லும் நிலை உள்ளது.
இதனால் பயணிகள் தரப்பில், ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு, உள்நாட்டு முனையம் வருகை பகுதியில், பிக்கப் பாய்ண்ட் இருந்ததைப் போல்,பழைய இடத்திலேயே பிக்கப் பாய்ண்ட் மாற்றப்படுவது ஒன்றே, பயணிகளின் சிரமங்களுக்கு, நிரந்தர தீர்வு காண வழியாக இருக்கும் என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனர்.
ALSO READ | Delhi Ganesh: "முனியாண்டி முதல் சிதம்பரம் வரை" காலத்தால் அழியாத டெல்லி கணேஷ் கதாபாத்திரங்கள்!