மேலும் அறிய

போலீஸ் உடையில் மிருகம் !! சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தலைமை காவலர்

11-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவனுக்கு வலுக்கட்டாயமாக மது ஊற்றிக் கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்த வடபழனி காவல் நிலைய தலைமை காவலர் வேலப்பன் போக்சோ சட்டத்தில் கைது

சிறுவனை மது குடிக்க வைத்து டார்ச்சர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது தாய் , தந்தை , அக்கா ஆகியோருடன் வசித்து வருகிறார். நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் 11 படித்து வரும் சிறுவன் திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு செல்ல வேண்டி கடந்த 25 ஆம் தேதி தனது குடும்பத்துடன் சென்னைக்கு வந்துள்ளார்.

பின்னர் சிறுவன் குடும்பத்துடன் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள மாமா வீட்டில் தங்கி இருந்த நிலையில் மறுநாள் மே 26 - ம் தேதி அன்று குடும்பத்துடன் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் உறவினர் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

இதனை அடுத்து சிறுவன் மாமா வீட்டில் இரு நாட்கள் தங்கி இருப்பதாக கேட்டதன் பேரில் பெற்றோர் அவரை உறவினர் வீட்டில் விட்டு விட்டு அவர்கள் சொந்த ஊரான நாகர்கோவிலிலுக்கு சென்று விட்டனர். இந்நிலையில் சிறுவன் உறவினர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது அவரது உறவினரான மாமா தனது நண்பரை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

பின்னர் இருவரும் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து மது அருந்திய நிலையில் போதை தலைக்கேறி உறவினர் அங்கேயே தூக்கி விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மதுபோதையில் இருந்த அவரது நண்பர் சிறுவனை எழுப்பி மீதி இருந்த மதுவை அவரது வாயில் வலுக் கட்டாயமாக ஊற்றி குடிக்க வைத்துள்ளார்.

சிறுவனின் வாயில் ஆண் உறுப்பு

சிறுவனின் வாயில் தனது ஆண் உறுப்பு வைத்து பாலியில் ரீதியாக துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் செய்வதறியாது அருகில் இருந்த டிவி ரிமோட்டை எடுத்து அந்த நபர் முகத்தில் அடித்து விட்டு கூச்சலிட்டவாறே கதவை வெளியே பூட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

தொடர்ந்து சிறுவன் அங்கிருந்த அசோக் நகர் காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை புகாராக அளித்ததை அடுத்து போலீசார் சிறுவனை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இருவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

விசாரணையில் சிறுவனுக்கு மதுவை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர் 35 வயதுடைய வேலப்பன் என்பது அவர் காவலராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. அசோக் நகர் காவலர்‌ குடியிருப்பில் வசித்து வரும் வேலப்பன் கடந்த 2013 ஆண்டு தமிழக காவல் துறையில் பணிக்கு சேர்ந்ததும் தற்போது வடபழனி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருவதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர் விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மாமா காவலர் வேலப்பன் நண்பர் என்பதால் இரவு அவரை வீட்டிற்கு அழைத்து இருவரும் மது அருந்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையெடுத்து அசோக் நகர் போலீசார் காவலர் வேலப்பன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் சிறுவனின் மாமாவையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலித்தால் விலைவாசி மேலும் உயரும் !! வணிகர் சங்கம் எச்சரிக்கை
UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலித்தால் விலைவாசி மேலும் உயரும் !! வணிகர் சங்கம் எச்சரிக்கை
தாம்பரம் ரயில் நிலையத்தில் 19 புதிய வசதிகள்! நவம்பர், டிசம்பரில் என்னென்ன மாற்றங்கள்?
தாம்பரம் ரயில் நிலையத்தில் 19 புதிய வசதிகள்! நவம்பர், டிசம்பரில் என்னென்ன மாற்றங்கள்?
சொகுசு வாழ்க்கை ஆசை ; டாக்டர் வீட்டில் 10 சவரன் நகை திருடிய வேலைக்காரப் பெண் - சிக்கியது எப்படி
சொகுசு வாழ்க்கை ஆசை ; டாக்டர் வீட்டில் 10 சவரன் நகை திருடிய வேலைக்காரப் பெண் - சிக்கியது எப்படி
Chennai Metro: உடனடி ஹிட் அடித்த பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ..! ரூ.50-க்கு ஏர்போர்ட் & சென்ட்ரல், 3 பெட்டிகள் போதாது..
உடனடி ஹிட் அடித்த பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ..! ரூ.50-க்கு ஏர்போர்ட் & சென்ட்ரல், 3 பெட்டிகள் போதாது..

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
Embed widget