மேலும் அறிய
Advertisement
Ford | காஞ்சிபுரம் : பணி புறக்கணிப்பு.. மீண்டும் ஃபோர்டு ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்..!
மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளாக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. சென்னையில் மறைமலை நகர் மற்றும் குஜராத்தின் சனந்த் பகுதிகளில் அந்நிறுவனத்தின் வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்த ஆலைகளில் வருடத்திற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது 80,000 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்தியாவில் உள்ள இரு ஆலைகளையும் மூட ஃபோர்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
ஃபோர்டு தொழிற்சாலையை நம்பியுள்ள 4 ஆயிரம் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மறைமுக தொழிலாளர்களுக்கும் இச்செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் ஊழியர்களின் பணி பாதுகாப்பு குறித்த தொழிற்சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளை ஏற்க ஃபோர்டு நிறுவனம் மறுத்துவிட்டது. அதனால் அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியான நிலையில் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது ஃபோர்டு நிறுவனம்.
மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையில், ECOSPORTS, எண்டவர்'. 'ஃபிகோ' மாடல் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இதுவரை பெற்ற ஆர்டர்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை ஏற்றுமதி செய்ய வேண்டி இருப்பதால், வருகின்ற மார்ச் மாதம் வரை மறைமலைநகர் தொழிற்சாலையில் உற்பத்தி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் உற்பத்தி செய்வதற்கு தாமதமானால் ஏப்ரல் - மே வரை நீடிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியதையடுத்து, தங்கள் பங்குளை விற்பனை செய்து ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை முழுமையாக தருவதாக அறிவித்திருந்தது.இந்நிலையில் போர்டு இந்தியா நிறுவனம் தனது பங்குளை டாடா மோட்டார் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதாக தெரிவித்திருந்த அறிக்கை இதுவரையில் அறிவிக்காமல் , ஜூன் மாதம் தொடக்கத்திலேயே ஊழியர்களை வேலையில் இருந்து நிறுத்த போவதாக போர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ஊழியர்கள் வேலையில்லாமல் அவதிபடும் நிலையில் தள்ளப்படவுள்ளனர். அதனை கண்டித்து போர்டு இந்தியா நிறுவனத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்று நள்ளிரவு முதல் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் இன்றும் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion