மேலும் அறிய

Chennai Ford: ஜூலையில் தொடங்குகிறதா ஃபோர்டு தொழிற்சாலை..? இளைஞர்களுக்கு இன்ப அப்டேட்..!

Maraimalai Nagar Ford: சென்னை போர் தொழிற்சாலை வருகின்ற ஜூலை மாதம் முதல் தனது முதற்கட்ட பணிகளை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Ford in Chennai: சென்னை மறைமலைநகர் ஃபோர்டு நிறுவனம், தனது நிறுவனத்தில் கார்களுக்கு பதில் இன்ஜின்களை உற்பத்தி செய்யும் முடிவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஃபோர்டு நிறுவனம்

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, சென்னை மற்றும் குஜராத் ஆகிய இரண்டு இடங்களில் இரண்டு தொழிற்சாலைகளை அமைத்து உற்பத்தி செய்து வந்தது. இதன் மூலம் இரண்டு தொழிற்சாலைகளிலும் பல ஆயிரக்கணக்கான, வேலைவாய்ப்புகள் உருவாகி இருந்தன. இந்தியாவில் ஃபோர்டு கார்களின் விற்பனை படிப்படியாக சரியத் தொடங்கியது. தொடர்ந்து, தொழிற்சாலையில் கார் உற்பத்தியும் படிப்படியாக அந்த நிறுவனம் குறைத்து வந்தது. 

தொழிற்சாலையை விற்ற ஃபோர்டு

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் தொடர் நஷ்டம் ஏற்பட்டதால், இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு இடங்களில் செயல்பட்டு வந்த தொழிற்சாலையை மூடியது. ஃபோர்டு நிறுவனத்தின் மூடப்பட்ட குஜராத் தொழிற்சாலையை, டாடா குழுமம் 725 கோடி ரூபாய்க்கு, வாங்கியது. சென்னை தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கும் செட்டில்மெண்ட் அறிவித்தது. பெரும்பாலான ஊழியர்கள் செட்டில்மெண்ட் தொகையை பெற்ற நிலையில், சில ஊழியர்கள் அதைப் பெற்றுக்கொள்ளாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. 

தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை

ஃபோர்டு தொழிற்சாலை இந்தியாவிலிருந்து வெளியேறியது மிகப்பெரிய, அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக சென்னை தொழிற்சாலையை பல்வேறு நிறுவனங்கள் வாங்க முயற்சி மேற்கொண்டன. இறுதியில் தமிழ்நாடு அரசு ஃபோர்டு நிறுவனத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. 

தமிழ்நாடு அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஃபோர்டு தொழிற்சாலை மீண்டும் இயங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், நேரடியாக ஃபோர்டு நிறுவன ஊழியர்களை சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் நிறுவனம்

சென்னை மறைமலைநகர் தொழிற்சாலையில் என்டேவர், எவரெஸ்ட் ஆகிய மின்சார மாடு கார்களை இங்கு உற்பத்தி செய்ய அந்த நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வந்ததாக தகவல்கள் தெரிவித்தனர். இதற்கான முதலீடுகள் அதிகம் தேவைப்படும் என்பதால் அந்த முயற்சிகள் நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது கார் என்ஜின் கலை மற்றும் தயாரிக்க முடிவெடுத்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பின் வாங்க காரணம் என்ன? 

ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறியபோது, நாடு முழுவதும் இந்த நிறுவனத்தின் விற்பனை மையங்கள் மூடப்பட்டன. தற்போது பராமரிப்பு நிலையங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. எனவே ஏற்றுமதி மட்டும் செய்ய வேண்டிய சூழல் இருந்தது. இதனாலே கார் இன்ஜின்களை மட்டும் தயாரிக்க போன் நிறுவனம் முன் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூலையில் முதற்கட்ட பணிகள் ?

ஃபோர்டு தொழிற்சாலை உற்பத்தியை தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டதற்கு காரணம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்த ஒரு சில முடிவுகள் என தகவல்கள் வெளியாகி இருந்தன. தற்போது ஆட்டோமொபைல் துறையில் இறக்குமதி வரியை விதிக்க, முடிவில் இருந்து ட்ரம்ப் பின்வாங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ஜூலை மாதம் முதல், முதற்கட்ட பணிகளை தொடங்கும் நடவடிக்கையில் நிறுவனம் இறங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Ajit Pawar: நொறுங்கிய விமானம் - அஜித் பவார் உட்பட 6 பேரும் மரணம் - DGCA தகவல், நடந்தது என்ன?
Ajit Pawar: நொறுங்கிய விமானம் - அஜித் பவார் உட்பட 6 பேரும் மரணம் - DGCA தகவல், நடந்தது என்ன?
Ajit Pawar Plane Crash: அஜித் பவார் பயணித்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது - துணை முதல்வருக்கு என்ன ஆச்சு?
Ajit Pawar Plane Crash: அஜித் பவார் பயணித்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது - துணை முதல்வருக்கு என்ன ஆச்சு?
Budget 2026: பட்ஜெட்டில் நிதி வேட்டை நடத்தப்போகும் 4 மாநிலங்கள்! பாஜக போடும் ப்ளான் இதுதானா?
Budget 2026: பட்ஜெட்டில் நிதி வேட்டை நடத்தப்போகும் 4 மாநிலங்கள்! பாஜக போடும் ப்ளான் இதுதானா?
OCI Card: அதென்ன ஒசிஐ கார்ட்? சட்டென நீட்டிய ஐரோப்பிய கவுன்சில் தலைவர் - உற்சாகத்தில் மூழ்கிய பிரதமர் மோடி
OCI Card: அதென்ன ஒசிஐ கார்ட்? சட்டென நீட்டிய ஐரோப்பிய கவுன்சில் தலைவர் - உற்சாகத்தில் மூழ்கிய பிரதமர் மோடி
ABP Premium

வீடியோ

OPS ADMK Alliance | TTV-க்கு பாஜக கொடுத்த TASK! கூட்டணிக்கு வருகிறாரா OPS? குக்கர் சின்னத்தில் போட்டி?
Maharashtra Police | ”அம்பேத்கரையே மதிக்கல என் வேலை போனாலும் பரவால” பாஜக அமைச்சர் vs பெண் POLICE
MK Stalin Warns KO Thalapathi |
Ramadoss vs DMK | திருமாவுக்காக கைவிரித்த திமுக! குழப்பத்தில் ராமதாஸ்! சைலண்டாக இருக்கும் விஜய்
Jothimani |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ajit Pawar: நொறுங்கிய விமானம் - அஜித் பவார் உட்பட 6 பேரும் மரணம் - DGCA தகவல், நடந்தது என்ன?
Ajit Pawar: நொறுங்கிய விமானம் - அஜித் பவார் உட்பட 6 பேரும் மரணம் - DGCA தகவல், நடந்தது என்ன?
Ajit Pawar Plane Crash: அஜித் பவார் பயணித்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது - துணை முதல்வருக்கு என்ன ஆச்சு?
Ajit Pawar Plane Crash: அஜித் பவார் பயணித்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது - துணை முதல்வருக்கு என்ன ஆச்சு?
Budget 2026: பட்ஜெட்டில் நிதி வேட்டை நடத்தப்போகும் 4 மாநிலங்கள்! பாஜக போடும் ப்ளான் இதுதானா?
Budget 2026: பட்ஜெட்டில் நிதி வேட்டை நடத்தப்போகும் 4 மாநிலங்கள்! பாஜக போடும் ப்ளான் இதுதானா?
OCI Card: அதென்ன ஒசிஐ கார்ட்? சட்டென நீட்டிய ஐரோப்பிய கவுன்சில் தலைவர் - உற்சாகத்தில் மூழ்கிய பிரதமர் மோடி
OCI Card: அதென்ன ஒசிஐ கார்ட்? சட்டென நீட்டிய ஐரோப்பிய கவுன்சில் தலைவர் - உற்சாகத்தில் மூழ்கிய பிரதமர் மோடி
Parliament Budget Session: ஆளுநருக்கு எதிரான ஸ்கெட்ச்சில் திமுக..! பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம், திட்டம் என்ன?
Parliament Budget Session: ஆளுநருக்கு எதிரான ஸ்கெட்ச்சில் திமுக..! பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம், திட்டம் என்ன?
OPS: வாசல் திறந்திருக்கிறது.. அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்? கிரீன் சிக்னல் கொடுத்தாரா இபிஎஸ்?
OPS: வாசல் திறந்திருக்கிறது.. அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்? கிரீன் சிக்னல் கொடுத்தாரா இபிஎஸ்?
European Car: எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறையும்..! லட்சங்களில் சேமிப்பு? ரூ.49 லட்சம் வரை மிச்சம்
European Car: எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறையும்..! லட்சங்களில் சேமிப்பு? ரூ.49 லட்சம் வரை மிச்சம்
Tamilnadu Headlines: ராகுலைச் சந்திக்கும் கனிமொழி.. மீண்டும் அதிகரிக்கப்போகும் திருப்பூர் ஆடை ஏற்றுமதி - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: ராகுலைச் சந்திக்கும் கனிமொழி.. மீண்டும் அதிகரிக்கப்போகும் திருப்பூர் ஆடை ஏற்றுமதி - 10 மணி சம்பவங்கள்
Embed widget