சோலா பூரி முழுக்க புழுக்கள், பூச்சிகள்.. சென்னையின் பிரபல உணவகம் கொடுத்த பதில் என்ன தெரியுமா?
சென்னையில் உள்ள பிரபல தனியார் வணிக வளாகத்தில் இயங்கி வந்த பிரபல உணவகத்தில் சோலாபூரியில் புழுக்களும், பூச்சிக்களும் இருந்தது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
சென்னை, திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ளது தனியார் வணிகவளாகம். இந்த மாலில் முன்னணி நிறுவனங்களின் கடைகள், விற்பனை நிலையங்கள் அமைந்துள்ளது. மேலும், பிரபல உணவு நிறுவனங்களின் உணவகங்களும் அமைந்துள்ளது. இந்த நிலையில், சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராணி என்பவர் நேற்றிரவு தன் மகனுடன் தனியார் வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார்.
அந்த வணிக வளாகத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள பிரபல உணவு விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு தன்னுடைய மகனுக்கு சோலா பூரி ஆர்டர் செய்துள்ளார். உணவகத்தில் இருந்தும் சோலா பூரியை அளித்துள்ளனர். அப்போது, சோலா பூரியில் இருந்து துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சோலாபூரியை தனது மகன் சாப்பிடாமல் தடுத்த ராணி, அதை ஆய்வு செய்தார். அப்போது, சோலாபூரியில் இருந்து அதிக துர்நாற்றம் வீசியது. சோலா பூரி முழுவதும் புழுக்களும், பூச்சிக்களும் இருந்துள்ளது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ராணி உடனடியாக உணவகத்தின் நிர்வாகத்தை அணுகியுள்ளார். அதற்கு அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை. மேலும், ஒரே ஒரு இடத்தில் மட்டும்தானே பூச்சி உள்ளது. மற்ற இடம் எல்லாம் நன்றாகதானே உள்ளது என்று மிகவும் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். இதனால், அவர் உடனடியாக சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தொலைபேசி மூலம் பூரியில் புழு இருந்த புகைப்படதுடன் புகார் அளித்தார்.
மேலும் படிக்க : வார்டு வாரியாக வாட்ஸ்அப் குழு.. கசடு மேலாண்மை.. திடக்கழிவு மேலாண்மை.. நம்பர் ஒன்னாக அசத்திய கருங்குழியின் கதை..!
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சுந்தரமூர்த்தி உணவகத்தில் ஆய்வுசெய்தார். அப்பொழுது சோலாப்பூரிக்கு பிசைந்து வைத்திருந்த மாவில் அதிகப்படியான புழுக்கள் இருந்ததையும், அந்த மாவு கெட்டுப்போனதையும் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து, விரைவில் தனியார் மாலில் செயல்பட்டு வந்த அந்த பிரபல உணவகத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரி தெரிவித்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பிரபல தனியார் வணிகவளாகத்தில் இயங்கி வந்த பிரபல உணவகத்தில் தரமற்ற, சுகாதாரக்கேடான உணவு விற்பனை செய்யப்பட்டு வந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : Independence Day: சென்னையில் புதிய பூங்காவை திறந்து வைத்து பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலின்
மேலும் படிக்க : Arumbakkam Robbery: கொள்ளையர்கள் 7 பேரும் ஒரே பள்ளி மாணவர்கள்...! சென்னை வங்கிக் கொள்ளையில் அதிர்ச்சி தகவல்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்