”நான் எந்த கட்சியிலும் இல்லை!” ஈசிஆர் சம்பவத்தில் புதிய திருப்பம்.. கைதானவர் பகீர் வாக்குமூலம்
Crime : கடந்த ஜனவரி 25ஆம் தேதி நள்ளிரவில், சென்னை ஈசிஆர் சாலையில், காரில் சென்ற பெண்களை, திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர் வழிமறித்து மிரட்டுவது போன்ற, வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது..

எனக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, டோல் கேட்டில் மாட்டாமல் இருக்க தான் காரில் திமுக கொடி கட்டி இருந்தோம் என ஈசிஆரில் பெண்களை துரத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த ஜனவரி 25ஆம் தேதி நள்ளிரவில், சென்னை ஈசிஆர் சாலையில், காரில் சென்ற பெண்களை, திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர் வழிமறித்து மிரட்டுவது போன்ற, வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.. இளைஞர்கள் வந்த காரில் திமுக கொடி மாட்டியிருந்த சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் விமர்சனத்தில் சிக்கியது. பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: Muzaffarnagar crime : திருமணம் செய்ய வற்புறுத்தல்.. பாலியல் வன்கொடுமை.. எரிந்த நிலையில் மண்டை ஓடு! அதிர்ந்த உ.பி
கைது செய்யப்பட்டவர்களில் சந்துரு என்பவர் ஈசிஆரில் நடந்தது என்ன என்பதையும், திமுக கொடி காரில் வைக்கப்பட்டிருந்தது ஏன் என்பது தொடர்பாகவும் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
அவர் பேசிய அந்த வீடியோவில், கொடைக்கானல் செல்வதற்காக டோல்கேட்டில் மாட்டாமல் செல்வதற்காக திமுக கொடியை பொருத்தியதாக தெரிவித்தார். மேலும் கைது செய்யப்பட்ட சந்தோஷ் என்ற நபர் அறிவுறுத்தலின் பேரில் பெண்களை துரத்தியதாக சந்துரு தெரிவித்துள்ளார். மேலும் எனக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
ஈசிஆர் சாலையில் பெண்களை துரத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்துரு வாக்குமூலம் #ECRIssue #ECR #TamilNews #DMK #ADMK #TNPolice #ViralVideo pic.twitter.com/lLLl3uRcio
— ABP Nadu (@abpnadu) February 2, 2025
சந்தோஷ் தான் பெண்கள் சென்ற காரை துரத்த கூறியதாகவும், பின்னர் பெண்களின் காரை துரத்திய பிறகு தவறான காரை பின் தொடர்ந்துவிட்டோம் எனக்கூறி மன்னிப்பு கேட்டதாகவும் வாக்குமூலம் சந்துரு வாக்குமூலம் அளித்துள்ளார்.






















