சிக்கலில் பயணிகள்.. தொடர்ந்து ரத்தாகும் விமானங்கள்.. காரணம் என்ன ?
இன்று ஒரே நாளில் 4, புறப்பாடு விமானங்கள்,5 வருகை விமானங்கள், ஆகிய 9 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், இன்று ஒரே நாளில் 4, புறப்பாடு விமானங்கள்,5 வருகை விமானங்கள், ஆகிய 9 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. பெங்களூர், கொல்கத்தா, டெல்லி, புனே, கவுகாத்தி உள்ளிட்ட விமானங்கள், நிர்வாக காரணங்களுக்காக, இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதி.
சென்னை உள்நாட்டு விமான நிலையம்
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, இன்று காலை 9.40 மணிக்கு பெங்களூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மாலை 6.10 மணிக்கு கவுகாத்திக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இரவு 9.10 மணிக்கு டெல்லிக்கு செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம், இரவு 10.40 மணிக்கு கொல்கத்தா செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ஆகிய 4 புறப்பாடு விமானங்கள், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
5 வருகை விமானங்கள் ரத்து
அதைப்போல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு வருகை விமானங்களான, அதிகாலை ஒரு மணிக்கு புனேயில் இருந்து வரவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், காலை 9 மணிக்கு பெங்களூரில் இருந்து வரவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மாலை 5.35 மணிக்கு பெங்களூரில் இருந்து வரவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இரவு 8.20 மணிக்கு டெல்லியில் இருந்து வரவேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம், இரவு 10.05 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து வரவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ஆகிய 5 வருகை விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
அடிக்கடி ரத்து
இதைப்போல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று 4 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள், மொத்தம் 9 பயணிகள் விமானங்கள், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. நிர்வாக காரணங்களால், இந்த விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்து இருந்த பயணிகள், விமானங்கள் திடீர் ரத்து காரணமாக, பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, இதை போல் நிர்வாக காரணங்கள் என்று கூறி, பயணிகள் விமானங்கள் அடிக்கடி ரத்து செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில் முன்பதிவு செய்துள்ள விமான பயணிகள், தாங்கள் பயணிக்க வேண்டிய விமானங்கள் இன்று இயக்கப்படுகிறதா? என்று அந்தந்த விமான நிறுவனங்களிடம் கேட்டுவிட்டு, அதன் பின்பு பயணம் செய்ய, விமான நிலையம் வரவேண்டிய நிலை உள்ளது.