(Source: ECI/ABP News/ABP Majha)
இளைஞர் உயிரிழப்பு சம்பவம் : மழைநீர் வடிகால் பணி நடக்கும் இடங்களில் தடுப்புகள் அமையுங்கள் - சென்னை மாநகராட்சி
சென்னையில் மழைநீர் வடிகால் நடைபெறும் பணிகளில் தடுப்புகள் அமைப்பதை உறுதி செய்யுமாறு மாநகாராட்சி உத்தரவிட்டுள்ளது
சென்னையில் மழைநீர் வடிகால் நடைபெறும் பணிகளில் தடுப்புகள் அமைப்பதை உறுதி செய்யுமாறு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இளம் பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் மழை நீர் வடிகாலில் விழுந்து மரணமடைந்த நிலையில், சென்னை மாநகராட்சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும் மழை:
வடகிழக்கு பருவமழை இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், சென்னையில் மழைநீர் வடிகால் திட்டத்திற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காசி திரையரங்கம் அருகே மழைநீர் வடிகால் கால்வாய் அமையக்கக்கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது.
பத்திரிகையாளர் உயிரிழப்பு:
அதில் தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்த 24 வயதான முத்துகிருஷ்ணன் தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்துகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னையில் பல்வேறு பிரிவுகளாக பல ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மழைநீர் மற்றும் வெள்ளத் தடுப்பு கால்வாய் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அவற்றில் பல பணிகள் நீண்ட கால பணிகள் என்பதால், அவற்றின் பணிகள் உடனடியாக முடியாது. அந்த பணிகள் இப்போது நிறைவடையாததால் நகரப்பகுதிகளில் மழை நீர் வடிவதில் அமைக்கும் பணியில் பெரிய சிக்கல்கள் ஏற்படாது.
ஆனால், மாநகரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முடிக்கப்பட வேண்டிய சூழலில் உள்ளது. அதனால் அவற்றை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர்.
மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பணிகள் நடைபெறும் பகுதி வழியாக செல்லும் மக்கள் பல்வேறு விபத்துக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு மத்தியில் வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர். இதனால் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்படுகிறது.
மேலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த 24 வயதான முத்துகிருஷ்ணன் பள்ளத்தில் விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
”தடுப்புகள் அமைப்பதை உறுதி செய்க”
இந்நிலையில், சென்னையில் மழைநீர் வடிகால் நடைபெறும் பணிகளில் தடுப்புகள் அமைப்பதை உறுதி செய்யுமாறு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், இளம் பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் மழைநீர் வடிகாலில் விழுந்து மரணமடைந்த நிலையில், சென்னை மாநகராட்சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also read: Coimbatore Blast : "கோவையில் காரில் சிலிண்டர் வெடித்தது எப்படி...?" டி.ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கம்