மேலும் அறிய

Coimbatore Blast : "கோவையில் காரில் சிலிண்டர் வெடித்தது எப்படி...?" டி.ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கம்

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்தது எவ்வாறு என்பது குறித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கம் அளித்தார்.

கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக இன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. கார் முழுவதும் தீயில் எரிந்து கருகியதில், காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். சத்தம் கேட்டு வந்த பொது மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதனிடையே காரில் சிலிண்டர் வெடித்த இடத்தில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் உயிரிழந்தவரின் அடையாளத்தை காவல் துறையினர் கண்டறிந்தனர். உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், அவர் பழைய துணி விற்பனை செய்யும் வேலை பார்த்து வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தியுள்ளனர்.


Coimbatore Blast :

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு காவல் துறை தலைவர் சைலேந்திர பாபு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். ”கோவையில் நடந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜமேசா முபின் என்ற 25 வயது நபர் வெடி விபத்தில் உயிரிழந்த நபர் என்பது தெரியவந்துள்ளது.

அவர் வந்த காரில் ஆணிகள், கோலி குண்டுகள் போன்றவை இருந்தது தடயறிவியல் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்டதில் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இறந்தவர் மீது வேறு வழக்குகள் எதுவும் இல்லை. இருப்பினும் இறந்தவருடன் தொடர்பில் இருந்த நபர்களை விசாரித்து வருகின்றோம்.

12 மணி நேரத்திலேயே குற்றவாளி யார் என்பதை தனிப்படை காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். இந்த கார் 9 பேரிடம் கைமாறியுள்ளது. பத்தாவது நபர் தான் இந்த காரை வாங்கி உள்ளார். தொடர்ந்து இது குறித்து வேகமாக விசாரணை நடத்தி காரை யார் வாங்கினார் என்பது குறித்தும், சிலிண்டர் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் கண்டறிந்துள்ளோம். 


Coimbatore Blast :

கோவை மாநகர காவல் துறை சிறப்பாக இந்த வழக்கை கையாண்டனர். அவர்களுக்கு வாழ்த்துகள். மேற்கு மண்டலத்தில் இருந்து 6 தனிப் படையினர் இந்த வழக்கை விசாரித்து உதவியுள்ளனர். ஜமோசா முபினிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், அவர் மீது வேறு வழக்குகள் எதுவும் கிடையாது. போலீஸ் செக்போஸ்ட் அங்கு இருந்ததால் அவர் இறங்கி ஓடி இருக்கலாம். இன்னும் புலன் விசாரணை நடைபெறுகின்றது. காரில் எங்கேயா இந்த பொருட்களை கொண்டு சென்று இருக்கின்றனர். வருங்காலத்தில் ஏதாவது திட்டமிட்டு இருக்கலாம். 

வீட்டில் கைப்பற்றபட்ட வெடி மருத்துகளை பார்க்கும் போது எதிர்காலத்திற்கான திட்டங்களாக இருக்கலாம். தற்கொலை படையாக இருக்க வாய்ப்பில்லை. ஆணி, கோலி குண்டு போன்ற பொருட்கள் வண்டியில் இருந்த போது சிலிண்டர் வெடித்துள்ளது. வெடிமருந்துகள் வீட்டில்தான் இருந்தது. இறந்தவர் இஞ்சினியரிங் படித்துள்ளார். வருங்கால திட்டம் என்ன என்பது தெரியவில்லை. சில ஆண்டுகளாக அவருடன் மொபைல் போனில் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். ஒவ்வொரு தனிப்படையும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.


Coimbatore Blast :

12 மணி நேரத்திற்குள் குறிப்பிட்ட நபரை கண்டறிந்துள்ளோம். எந்த அமைப்பிலும் உறுப்பினராக இருந்தாக தெரியவில்லை. விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. வழக்குகள் இருக்கும் நபர்களோடு தொடர்பில் இருந்துள்ளார். அந்த நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த வழக்கில் நல்ல முன்னேற்றம் நடைபெற்று வருகின்றது. தமிழகம் முழுவதும் 1.10 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவையிலும் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம். செக்போஸ்ட் இருந்ததால் அதை தாண்டி தப்பி ஓடியிருக்கின்றார். அப்போது சிலிண்டர் வெடித்து இருக்கின்றது. சந்தேக மரணம், வெடிமருத்து சட்டம் ஆகிய இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget