சென்னையில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது - ஆணையர் ககன்தீப் சிங் பேடி
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்குக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்
கடந்த 2020-ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவத்தொடங்கியது. தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனையின் படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தொற்று பரவலை கட்டுபட்டுத்தவும் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுக்காக பல்வேறு நிலையிலான ஆராய்ச்சிகளுக்கு பிறகு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு மருத்துவ அவசர பயன்பாட்டு அடிப்படையில் அதனை பொதுமக்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழக அரசு தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு விலையிலாமல் தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது
மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களை பின்பற்றி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையி மாநகராட்சியின் நகர்புற சமுதாய மருத்துவமானைகள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி முதற்காட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், பின்னர் 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ள நபர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தபப்ட்டன. அதஜை தொடர்ண்டு 45 வயதிக்கு மேற்பட்ட அனைவருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்தப்பட்டதுடன் மருத்துவ மணியாளர்கள், முன் களப்பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் என முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளுக்கும் தடுப்பூசிகளை செலுத்த சென்னை மாநகராட்சி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி வழங்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டதுடன் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளையும் சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி மாற்றுத்திறனாளிகள் 2,464 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும் 195 நபர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் என மொத்தம் 2,659 தடுப்பூசிகள் மாற்றுத்திறனாளிகள் இருப்பிடங்களுக்கே சென்று செலுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி வழங்கலாம் என மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ல நிலையில் தற்போதய தடுப்பூசி இருப்பினை கருத்தில் கொண்டு தமிழக அரசு 189 வயதிற்கு மேற்பட்ட நபர்களில் நால்தோறும் செய்தித்தாள்கள் விநியோகம் செய்பவர்கள், பால் விநியோகிப்பவகள், தெருவோர வியாபாரிகள், மருந்தகங்கள், மளிகை கடை பணியாளர்கள், ஆட்டோ, கார், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், மிந்துறை பணியாளர்கள், உள்ளாட்சித்துறை பணியாளர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், விமான போக்குவரத்து பணியாளர்கள், மாநில பிற துறைகளின் தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு சேவை புரியும் தன்னார்வலர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் சென்னை மாநகராட்சி தடுப்பூசி செலுத்தி வருகிறது. மேற்குறிப்பிட்ட தடுப்பூசி முக்காம்களின் வாயிலாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் இதுநாள் வரை 15 லட்சத்து 34ஆயிரத்து 439 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும் 4 லட்சத்து 88 ஆயிரத்து 706 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. பெருநகர மாநகராட்சியின் சார்பில் மே மாதம் 31ஆம் தேதி வரை 20 லட்சத்து 23ஆயிரத்து 145 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு விலையிலாமல் செலுத்தப்பட்டுள்ளன.