Train Cancel: பயணிகள் கவனத்திற்கு.. சென்னை மின்சார ரயில்கள் ரத்து.. எந்தெந்த ரயில்கள் தெரியுமா ?
Electric Train Cancelled: "சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன"

Local trains cancelled in Chennai: பராமரிப்பு பணி காரணமாக சென்னை மின்சார ரயில்கள் இன்று மற்றும் நாளை மறுநாள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையின் மிக முக்கிய போக்குவரத்தாக மின்சார ரயில் போக்குவரத்து வருகிறது. சென்னை சென்ட்ரல் -கும்மிடிப்பூண்டி ஏராளமான மின்சார வகைகள் தினமும் இயக்கப்படுகின்றன. இவற்றில் பல ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பயணித்து வருகின்றனர். இந்த ரயில் தடம் மிக முக்கிய ரயில் தடம் என்பதால், ரயில்கள் ரத்து செய்யப்பட்டால் பெருமளவில் பயணிகள் பாதிப்படைந்து வருகின்றன.
இந்தநிலையில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால், சென்னை சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி இடையே 19 மின்சார ரயில் சேவைகள் இன்றும் மற்றும் 17ஆம் தேதியும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரம் என்ன ?
இது தொடர்பாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ள அறிக்கையில், செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி இடையே காலை 9:55 மணிக்கு செல்லும் ரயில் சென்னை கடற்கரையிலிருந்து இயக்கப்படும். இதேபோன்று தாம்பரம் கும்மிடிப்பூண்டி இடையே மாலை 3 மணிக்கு செல்லும் ரயில் சென்னை கடற்கரையிலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூலூர்பேட்டை - நெல்லூர் காலை 8:10 இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி பகல் 12:40 மணிக்கு இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
ஆவடி - சென்ட்ரல் இடையே காலை 4:25 மணிக்கு இயக்கப்படும் முறையில் ரத்து செய்யப்பட உள்ளது. நல்லூர் - சூலூர்பேட்டை இடையே காளை 10:20 மணிக்கு இயக்கப்படும் முறையில் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை காலை 5:400 மணி, 10:15, 12:10 ஆகிய ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.
சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி காலை 10:30, காலை 11: 35, நண்பகல் 1:40 ஆகிய ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது
கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் மதியம் ஒரு மணி, மாலை 3:45 மணி ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன
சூலூர்பேட்டை - சென்னை சென்ட்ரல் நண்பகல் 12:35, மாலை 3:10 ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை மதியம் 2:30, 3:15 மாலை 4:30 ஆகிய ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.





















