Chennai: பிப்., 1-ம் தேதி ஓலா, உபர் ஆட்டோக்கள் வேலை நிறுத்தம்!
Chennai: பிப்., 1-ம் தேதி ஓலா, உபர் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ஓலா, உபர் ஓட்டுநர்கள் பிப்ரவரி-1ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். ஓலா, உபர் நிறுவனங்கள் 25-40 சதவீதம் வரை வருமானத்தில் பங்கு கேட்பதாக தெரிவித்துள்ளனர்.
ஓலா, உபர் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவையை பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பைக் டாக்ஸி வரை வந்துவிட்டது. பைக் டாக்ஸிகளால் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாகவும் இந்த நிறுவனங்களால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாக பேசுபொருளானது.
ஓலா, உபர் நிறுவனங்களுக்காக ஆட்டோ ஓட்டமால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி, ரூ. 50, அடிப்படை கட்டணமாகவும் அடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ. 18 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டது.
ஓலா மற்றும் உபர் நிறுவனங்கள் 25 சதவிகிதம் கமிஷன் தொகையாக கேட்பதாக சொல்கின்றனர். இந்த நிலையில், ஓலா, உபர் நிறுவனங்களுக்கு ஆட்டோ ஓட்டுபவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
நிறுவனங்கள் அவர்களுக்கு கமிஷன் வேண்டும் என்பதால் சில சமயங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக கேட்கும்படி ஆகிவிடுகிறது. இது ஆட்டோவில் பயணிப்பவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட காரணமாக அமைந்துவிடுகிறது. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.” என்று ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தெரிவித்தார்.
ஓலா, உபர் சேவைகளை பயன்படுத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் நாளில் தங்களது பயணத்தை திட்டமிட்டுகொள்ளவும்.

