GSLV-F15 Mission: மைல்கல் பதிக்கும் ISRO-வின் 100வது Rocket Launch

Published by: ABP NADU
Image Source: Twitter/@isro

தனது 100வது செயற்கைக்கோள் ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பி மைல்கல் படைக்கவுள்ளது ISRO.

இஸ்ரோவால் அமைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டு வரும் இந்திய செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பைச் சேர்ப்பதே இந்த மிஷனின் நோக்கம்.

துல்லியமான ராணுவ நடவடிக்கை, கடற்படை மேலாண்மை, செயற்கைகோள்களுக்கான சுற்றுப்பாதை நிர்ணயம், IoT அடிப்படையிலான பயன்பாடுகள் போன்றவை இதன் பணிகளாகும்.

GSLV-F15 இந்தியாவின் 17வது ஜியோசின்க்ரோனஸ் செயற்கைக்கோள் ராக்கெட்டாக இருக்கும்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ராக்கெட் ஏவப்படுகிறது.

ஜனவரி 29,2025 அன்று, சரியாக காலை 06.23 IST நேரத்தில் ISRO விண்வெளியில் ராக்கெட்டை ஏவுகிறது.

ISRO - ராக்கெட் ஏவுதலை நாளை நேரலையாக ஒளிபரப்புகிறது.