அண்ணா பல்கலை மாணவி வழக்கில் முரண்பட்ட காவல்துறை Vs அமைச்சர்: கொந்தளித்த இபிஎஸ், அண்ணாமலை
Anna University Assault Case: ”அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் எனது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக திமுக அமைச்சர் கோவி செழியன்” விளக்கம் அளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம், பல சந்தேகங்களை எழுப்புகிறது என இபிஎஸ் , அண்ணாமலை உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், தமிழ்நாடு அரசு மீது குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.
முரண் கருத்துகள்:
சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவி ஒருவரை வளாகத்தின் வெளியில் பிரியாணி கடை நடத்தி வந்த நபர் உள்ளே நுழைந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்த தகவலும் , உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்த கருத்துகளும் முரண்பாடு இருந்தது. இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும், இந்த வழக்கின் போக்கு குறித்து குற்றச்சாட்டுகள் வைத்தனர். யார், என்ன தெரிவித்தார்கள்; என்ன முரண்பாடு என்ன என்பது குறித்து பார்ப்போம்.
சென்னை காவல்துறை ஆணையர் Vs அமைச்சர் செழியன்
உயர் கல்வித்துறை அமைச்சர், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது, “ முதலில் காவல்துறையிடம் புகார் அளித்த பிறகே, பல்கலைக்கழகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்.
ஆனால், நேற்று ஊடகங்களைச் சந்தித்த சென்னை காவல்துறை ஆணையர், பல்கலைக்கழகத்தின் குழு ( POSH ) மூலமாகவே காவல்துறைக்குப் புகார் வந்தது என்று தெரிவித்திருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்:
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என தீர்ப்பளித்த போதும், உச்சநீதிமன்றம் சென்று மேல்முறையீடு செய்திருக்கிறது திமுக அரசு . விசாராணை நேர்மையாக நடைபெற வேண்டுமெனில் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை:
இச்சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவிக்கையில், “ ஏன் இத்தனை முரண்பாடுகள்? உண்மையில் யாரைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது? உண்மையில் என்ன நடந்தது?
அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மாணவி, குற்றவாளிக்குத் தொலைப்பேசி அழைப்பு வந்ததாகத் தெரிவித்ததாகவும், சார் என்று கூறி, குற்றவாளி பேசியதாகவும் தெரிவித்ததாக முதலில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், அதனை அப்படியே வெளிவராமல் மறைக்கும் முயற்சி நடப்பதாகத் தெரிகிறது.
இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்வரை, இதனை விடப் போவதில்லை. பிரச்சினையை மடைமாற்றி, உண்மையை மறைத்துவிடலாம் என்ற நோக்கம் திமுக அரசுக்கு இருக்குமேயானால், திமுக அரசுக்கும் இந்தக் குற்றத்தில் தொடர்பு இருப்பதாகத் தான் கருத முடியும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், தன் கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக அமைச்சர் செழியன் விளக்கம் அளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவியின் புகார் பெறப்பட்டது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்துள்ளதாவது, “ அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த குற்றம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி காவல்துறை அவசர உதவி எண் 100 க்கு நேரடியாக தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்த காவல்துறையினரிடம் அண்ணா வந்த பல்கலைக்கழகத்தின் (POSH Prevention of Sexual Harrasment Committee) குழுவினைச் சேர்ந்த ஒரு பேராசிரியரின் உதவியோடு பாதிக்கப்பட்ட பெண் நடந்த விவரங்களை சொல்லி புகார் அளித்திருந்தார்.
காவல்துறையினர் பல்கலைக்கழகத்திற்கு வந்து விசாரணை செய்யும் போதுதான் இந்த சம்பவம் தொடர்பாக POSH குழுவில் இருந்த மற்றவர்களுக்கு இந்த பிரச்சனை தெரியவந்துள்ளது. அதை வைத்துதான் POSH குழு நேரடியாக புகார் அளிக்கவில்லை என தெரிவித்திருந்தேன். அது தவறான பொருள்படும்படி அமைந்துவிட்டது என அமைச்சர் செழியன் தெரிவித்துள்ளார்.