மேலும் அறிய

விமான நிலையமா பேருந்து நிலையமா ? குவியும் பொதுமக்களால் டிக்கெட் விலை உயர்வு..!

தீபாவளி பண்டிகையை  சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக, பயணிகள் பலர், விமானங்களில் பயணம் மேற்கொண்டு உள்ளதால், சென்னை விமான நிலையத்தில், பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது

தீபாவளி பண்டிகையை  சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக, பயணிகள் பலர், விமானங்களில் பயணம் மேற்கொண்டு உள்ளதால், சென்னை விமான நிலையத்தில், பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதை அடுத்து சேலம், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை விமான டிக்கெட் கட்டணங்கள், இன்றும், நாளையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளன.
 
தீபாவளி பண்டிகையை, சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் குடும்பமாக, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். தென் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்கள்  இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பஸ்களிலும் கூட்டம் நிறைந்து வழிகிறது. அரசு சிறப்பு பஸ்கள் அனைத்திலும், ஏற்கனவே பயணிகள் முன்பதிவு செய்து விட்டனர்.எனவே தனியார் ஆம்னி பஸ்களில், டிக்கெட் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளதாக பயணிகள் கருதுகின்றனர்.

விமான நிலையமா பேருந்து நிலையமா ? குவியும்  பொதுமக்களால்  டிக்கெட் விலை உயர்வு..!
 
இதை அடுத்து  விமானங்களில் பயணித்தால், பயண நேரம் குறைவு, சொந்த ஊரில் குடும்பத்தாருடன், கூடுதல் நேரம் இருந்து, பண்டிகையை கொண்டாடலாம் என்று, பயணிகள் பலர் விமான பயணத்துக்கு மாறி உள்ளனர்.இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, சேலம், மதுரை, கோவைக்கு செல்லும் விமானங்களில், அதிக அளவில் பயணிகள் பயணிக்கின்றனர். இதனால் வெள்ளி, சனி ஆகிய, இன்றும் நாளையும் இரு தினங்கள், இந்த  விமானங்கள் அனைத்திலும், பெரும்பாலான டிக்கெட் விற்பனை ஆகிவிட்டன. ஒரு சில உயர் வகுப்பு டிக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. அந்த டிக்கெட்கள்  கட்டணங்கள் மிகவும் அதிகமாக உள்ளன.
 
சென்னை- சேலம் வழக்கமான  கட்டணம் ரூ.2,390. இன்று நாளை, வெள்ளி, சனி  கட்டணம் ரூ.11,504.
 
சென்னை- தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ.4,273. இன்று நாளை வெள்ளி, சனி கட்டணம் ரூ.13,287.
 
சென்னை- கோவை  வழக்கமான கட்டணம் ரூ.3,315. வெள்ளி, சனி கட்டணம் ரூ.13,709.
 
சென்னை- திருச்சி வழக்கமான கட்டணம் ரூ.3,190. வெள்ளி சனி கட்டணம் ரூ.13,086.
 
சென்னை- மதுரை  வழக்கமான கட்டணம் ரூ.3,314. வெள்ளி, சனி கட்டணம் ரூ.13,415.
 
இதைப்போல் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்தாலும், சொந்த ஊரில் தங்கள் குடும்பத்தாருடன் தீபாவளி பண்டிகையை, கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில், விமான டிக்கெட் கட்டணத்தை பற்றி யோசிக்காமல், போட்டிப்போட்டுக் கொண்டு, விமான  டிக்கெட்கள் வாங்கிக் கொண்டு, பயணிகள் பயணித்து வருகின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் புறப்பாடு பகுதியில், பயணிகள் கூட்டம் பெருமளவு அலை மோதுகிறது
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Andhra Assembly Elections: அடித்து உடைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள்! ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் மோதல் - ஆந்திராவில் பரபரப்பு
Andhra Assembly Elections: அடித்து உடைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள்! ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் மோதல் - ஆந்திராவில் பரபரப்பு
Singer Velmurugan Arrest: பிரபல பாடகர் வேல்முருகன் அதிரடி கைது - என்ன காரணம்?
பிரபல பாடகர் வேல்முருகன் அதிரடி கைது - என்ன காரணம்?
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
Thadi Balaji: தேவையானதை வாங்கிக்கொண்டு அரசை மக்கள் திட்டலாமா? - நடிகர் தாடி பாலாஜி கேள்வி!
தேவையானதை வாங்கிக்கொண்டு அரசை மக்கள் திட்டலாமா? - நடிகர் தாடி பாலாஜி கேள்வி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Red Pix Felix Wife : ”FELIX உயிருக்கு ஆபத்துஎன் கணவர் எங்கே?” பெலிக்ஸ் மனைவி கேள்விEV Velu Son Car Accident : கார் விபத்தில் சிக்கிய மகன் கலக்கத்தில் எ.வ.வேலு பதற வைக்கும் CCTV காட்சிAsaduddin Owaisi plays cricket : கிரிக்கெட் ஆடிய ஓவைசி! குதூகலமான சிறுவர்கள்! பிரச்சார சுவாரஸ்யம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Andhra Assembly Elections: அடித்து உடைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள்! ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் மோதல் - ஆந்திராவில் பரபரப்பு
Andhra Assembly Elections: அடித்து உடைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள்! ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் மோதல் - ஆந்திராவில் பரபரப்பு
Singer Velmurugan Arrest: பிரபல பாடகர் வேல்முருகன் அதிரடி கைது - என்ன காரணம்?
பிரபல பாடகர் வேல்முருகன் அதிரடி கைது - என்ன காரணம்?
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
Thadi Balaji: தேவையானதை வாங்கிக்கொண்டு அரசை மக்கள் திட்டலாமா? - நடிகர் தாடி பாலாஜி கேள்வி!
தேவையானதை வாங்கிக்கொண்டு அரசை மக்கள் திட்டலாமா? - நடிகர் தாடி பாலாஜி கேள்வி!
TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது? முழு விவரம்
TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது? முழு விவரம்
Crime: ஆபாச வீடியோக்கள்! ஆண்களை மிரட்டி பணம், கார் பறித்த இரண்டு பெண்கள் - போலீசில் சிக்கியது எப்படி?
Crime: ஆபாச வீடியோக்கள்! ஆண்களை மிரட்டி பணம், கார் பறித்த இரண்டு பெண்கள் - போலீசில் சிக்கியது எப்படி?
Latest Gold Silver Rate: அப்பாடா! திங்கள் கிழமையே குறைந்த தங்கம் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
அப்பாடா! திங்கள் கிழமையே குறைந்த தங்கம் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
Embed widget