அயன் படத்தை மிஞ்சும் கடத்தல்கள்.. இப்படியுமா யோசிப்பாங்க? விமான நிலையத்தில் சிக்கும் தங்கம்!!
திரைப்படம் பானையில் கடத்தப்பட்ட சுமார் 1.34 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டது
சூர்யா நடிப்பில் வெளியான அயன் படத்தில் நடிகர் சூர்யா வெளிநாட்டில் இருந்து வித்தியாச வித்தியாசமாக யோசித்து வெளிநாட்டில் இருந்து கடத்தி வருவார். அது ரீல் என்றாலும் ரியலிலும் பல கடத்தல்களை தினம் தோறும் சந்திக்கிறது சென்னை விமான நிலையம்.
சென்னை விமான நிலையம்..
சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் துபாயில் இருந்து வந்து விமானத்தில் பயணம் செய்தவர்களை கண்காணித்தனர். அப்போது கேரளா மாநிலம் கன்னூரை சேர்ந்த நிசார் மண்டல (27) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
விசாரணையில் சிக்கிய நபர்கள்...
முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் துணிகளுக்கு நடுவே பர்ஸ் மற்றும் காலில் அணிந்து இருந்த ஷு ஆகியவற்றை பரிசோதித்து பார்த்த போது தங்கம் கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். இவரிடம் இருந்து ரூ. 64,98,000 மதிப்புள்ள 1 கிலோ 402 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.
Chennai Air Customs: Based on specific intel, six pax who arrived from Sharjah and Colombo by Flight No. G9 471 & SG 357 were intercepted by AIU Officers. 1.5 Kg of Gold valued Rs. 69.52 lakh was seized under the CA 1962. One pax arrested. @cbic_india pic.twitter.com/8KEDTVx30E
— Chennai Customs (@ChennaiCustoms) May 23, 2022
அதேபோல் கொழும்பு, சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து வந்த 6 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். உள்ளாடை, உடமைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். 6 பேரிடம் இருந்து ரூ. 69,50,000 மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கத்தை கைப்பற்றினார்கள். ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 1.24 கோடி மதிப்புள்ள 2 கிலோ 902 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து கேரளா வாலிபர் உள்பட 7 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக 9 பேரிடமும் தங்க கடத்தல், வெளிநாட்டு பணம் கடத்தல் பிண்ணனியில் உள்ளவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்தடுத்து சிக்கியவர்கள்...
அதேபோல் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீ கலந்தர் தமிமுல் அன்சாரி மற்றும் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ முகமது நாகூர் மொஹிதீன் ஆகிய இரு பயணிகள் துபாய் செல்வதற்காக விமான நிலையம் வந்து உள்ளனர். அப்போது சுங்கத்துறை அதிரிகாரிகள் இருவரையும் நிறுத்தி சோதனை செய்த போது உடைமைகளில் பல்வேறு வெளிநாட்டு கரன்சிகளை கட்டுக்கட்டாக கடத்தி செல்வது தெரிந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து சுமார் 10.70 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
”டான்ஸ் தப்பா ஆடுனா மாஸ்டர் திட்டுவாரோனு பயப்படுவாரு“ - ரஜினி குறித்து ஜான் பாபு மாஸ்டர்