(Source: ECI/ABP News/ABP Majha)
Chengalpattu Power Cut: கூடுவாஞ்சேரி , பொத்தேரி மக்களே உஷார்..! நாளை மின் நிறுத்தம்..!
Chengalpattu Power Cut Areas August 23rd: மின்சாரத்தை பயன்படுத்தி, முக்கிய தேவைகள் ஏதாவது இருப்பின் அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு கொள்ளுமாறு மின்சார வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பாண்டியன் நகர், கூடுவாஞ்சேரி ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, பெரியார் ராமசாமி சாலை உள்பட சுற்றுப்புற பகுதியில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. எனவே மின்சாரத்தை பயன்படுத்தி, முக்கிய தேவைகள் ஏதாவது இருப்பின் அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு கொள்ளுமாறு மின்சார வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கூடுவாஞ்சேரி மின் நிறுத்தம் ( guduvanchery power shutdown )
பருவமழை காலம் தொடங்குவதை முன்னிட்டு நாளை ( 23-08 2023 ) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மறைமலைநகர் கோட்டத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம், நெல்லிக்குப்பம், மாம்பாக்கம், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, தைலாவரம் ஆகிய துணை மின் நிலையங்களில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அன்றைய தினம் கேளம்பாக்கம் மார்கெட் பகுதி, சாத்தாங்குப்பம், இளவந்தாங்கல், வீராணம் சாலை, மாரியம்மன் கோவில் தெரு, நெல்லிக்குப்பம், அம்மாப்பேட்டை, கல்வாய், கண்டிகை, கீழ்கல்வாய், கொட்டமேடு, மேலையூர், சிறுங்குன்றம், கொண்டங்கி, மாம்பாக்கம் கூட்ரோடு, வேங்கடமங்கலம் ஒரு பகுதி,
பொத்தேரி வட்டாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் :
ஊரப்பாக்கம் பகுதிகளுக்கு உட்பட்ட பிரியா நகர், அருள் நகர் ஒரு பகுதி, ஜி.எஸ்.டி. சாலை (மேற்கு பகுதி), மீனாட்சி நகர், என்.ஜி.ஒ. காலனி, பாண்டியன் நகர், கூடுவாஞ்சேரி ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, பெரியார் ராமசாமி சாலை உள்பட சுற்றுப்புற பகுதியில் மின்விநியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை மறைமலைநகர் மின்சார வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்
பொதுமக்கள் குடிநீர் உட்பட தங்களின் தேவைகளை காலை 9 மணிக்குள் முடித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் கிராமப்பகுதிகளில் பொதுமக்கள் காலையிலேயே மின்சாதனப் பொருட்கள் பயன்பாடு இருந்தால் முடித்து கொள்ள வேண்டும். மாலை வரை மின்விநியோகம் இருக்காது என்பதால் முன்கூட்டியே தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மின் கட்டண விவரம்:
தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 2026ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தின் படி முதல் 100 யூனிட்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்ற நிலை தொடரும். அதன்பின்னர் 200 யூனிட்டுகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 யூனிட் வரை பயன்படுத்தோவருக்கு மாதம் ஒன்றுக்கு 147.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மின் பயன்பாடு | கூடுதல் கட்டணம் (2 மாதங்களுக்கு): |
200 யூனிட் | 55 ரூபாய் |
300 யூனிட் | 145 ரூபாய் |
400 யூனிட் | 295 ரூபாய் |
500 யூனிட் | 310 ரூபாய் |
600 யூனிட் | 550 ரூபாய் |
700 யூனிட் | 595 ரூபாய் |
800 யூனிட் | 790 ரூபாய் |
900 யூனிட் | 1,130 ரூபாய் |
இந்தக் கட்டண உயர்வு அனைத்தும் வரும் 2026-27 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடில் கடைசியாக 2014-ஆம் ஆண்டு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.