செங்கல்பட்டு மாவட்டத்தில் குடும்ப அட்டை தொடர்பாக மக்கள் குறைதீர் முகாம் - எங்கு, எப்போது தெரியுமா?
செங்கல்பட்டு மாவட்டத்தில் மே மாதம் 13.05.2023 அன்று (இரண்டாவது சனிக்கிழமை) வட்ட அளவில் கீழ்கண்ட கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக குடும்ப அட்டை தொடர்பாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இக்குறைதீர் முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் மற்றும் வண்டலூர் வட்டங்களில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் சுழற்சி முறையில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக குடும்ப அட்டை தொடர்பாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இக்குறைதீர் முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் மற்றும் வண்டலூர் வட்டங்களில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் சுழற்சி முறையில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் மே மாதம் 13.05.2023 அன்று (இரண்டாவது சனிக்கிழமை) வட்ட அளவில் கீழ்கண்ட கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது.
வ.எண் |
வட்டத்தின் பெயர் |
குறைதீர் முகாம் நடைபெறவுள்ள கிராமத்தின் பெயர் |
1 |
செங்கல்பட்டு |
குன்னவாக்கம் |
2 |
செய்யூர் |
சோத்துப்பாக்கம் |
3 |
மதுராந்தகம் |
பெரும்பாக்கம் |
4 |
திருக்கழுக்குன்றம் |
புலியுர் |
5 |
திருப்போரூர் |
காரணை |
6 |
வண்டலூர் |
வேங்கடமங்கலம் |
மேற்படி நடைபெறவுள்ள குறைதீர் முகாம்களில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை பதிவுசெய்தல் ஆகிய சேவைகளை பெற்று பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்