500 காவலர்கள்..! ட்ரோன் மூலம் கண்காணிப்பு..! ஜிஎஸ்டி சாலையில் தயாராக இருக்கும் செங்கல்பட்டு போலீஸ்.!
செங்கல்பட்டு காவல் எல்லைக்குட்பட்ட மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டுவர செங்கல்பட்டு போலீசார் தயார் நிலையில் உள்ளனர்
தீபாவளி பண்டிகை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்களுக்கு பிரதான நுழைவு வாயிலாக செங்கல்பட்டு மாவட்டம் இருந்து வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உட்பட்ட இடங்களில், தீபாவளியை முன்னிட்டு அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இதற்காக செங்கல்பட்டு காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
ஜிஎஸ்டி சாலை செங்கல்பட்டு
இந்தநிலையில் இந்த தீபாவளி விழாவிற்கு எந்த மாதிரியான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது என்பது குறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : செங்கல்பட்டு மாவட்டம் தீபாவளிக்கு பண்டிகையை முன்னிட்டு விடுமுறைகளில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் மக்கள், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் மற்றும் எந்த வித சிறு விபத்தும் ஏற்படாமல் இருக்கும் முக்கிய சந்திப்புகளில் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 20 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முக்கிய சந்திப்பு பகுதிகள் மற்றும் மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க 24 இடங்களில் வாகன சோதனை பணிகளுக்காக காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் தீவிர பாதுகாப்பு பணி
மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம் மார்க்கெட் மட்டும் அனைத்து வழிபாட்டுத்தலங்கள் அருகிலும் குற்றம் ஏதும் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 20 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க 33 இடங்களில் குற்ற ரவுண்ட் பணிக்காக காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மூன்று உட்கோட்டத்திலும் எந்த வித போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க மற்றும் குற்றச்சாட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ட்ரோன் சர்வே எலன்ஸ் பணிக்காக காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மக்கள் கூடும் இடங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு அது போன்ற இடங்களிலும் காவலர்கள் நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ஐந்து துணை காவல் கண்காணிப்பாளர் 20 காவல் ஆய்வாளர்கள் 90 உதவி ஆய்வாளர்கள் உட்பட சுமார் 500 காவலர்கள் சுயாட்சி முறையில் பணி செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று மக்கள் கூடும் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் ஏற்பாட்டில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது அதேபோன்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலி பெருக்கிகள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகள் விவரம்
நவம்பர் 9 ஆம் தேதி 3,465 பேருந்துகளும், நவம்பர் 10 ஆம் தேதி 3,995 பேருந்துகளும், 11 ஆம் தேதி 3,515 பேருந்துகள் என 10,975 பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் பிற ஊர்களில் இருந்து 5,920 பேருந்துகள் என மொத்தமாக 3 தினங்களில் மட்டும் 16 ஆயிரத்து 895 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோன்று தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூர் பயணிகள் திரும்புவதற்காக 13 ஆம் தேதி 3,375 பேருந்துகளும், 14 ஆம் தேதி 3,075 பேருந்துகளும், 15 ஆம் தேதி 3,017 பேருந்துகளும் சென்னைக்கு இயக்கப்படுகிறது. மற்ற இடங்களுக்கு 3,825 பேருந்துகள் இயக்கப்படுகிறது.