மேலும் அறிய
Advertisement
செங்கல்பட்டு அருகே சோகம்; கார் மோதி கவிழ்ந்த பள்ளி ஆட்டோ - 11 மாணவர்கள் காயம்
மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மேலவளம்பேட்டை என்ற இடத்தில் , தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 11 பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்.
பள்ளி ஆட்டோ விபத்து
செங்கல்பட்டு (Chengalpattu News): செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தமங்கலம் கிராமத்தில் இருந்து ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள், மதுராந்தகம் அடுத்த கருங்குழி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். சித்தமங்கலம் கிராமத்தில், இருந்து ஆட்டோ மூலமாக மாணவ மாணவிகளை பெற்றோர் அந்த பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல சித்தாமங்கலம் கிராமத்திலிருந்து கருங்குழி நோக்கி ஆட்டோவில் 11 மாணவர்கள் ஒரு ஆசிரியர் உட்பட 12 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
13 பேர் காயம்
அப்பொழுது மதுராந்தகம் அடுத்த மேடவளம் பேட்டையில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது , சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பள்ளி மாணவர்கள் ஒரு ஆசிரியர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் சிறு காயங்களுடன் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
அதிக காயம் அடைந்த 5 பேர் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ஒரு மாணவன் கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி ஆட்டோ விபத்து நடைபெற்றதால் அந்த பகுதி சோகத்தில் அடைந்துள்ளது.
மதுராந்தகம் விபத்து
ஆபத்தான முறையில் அதிக அளவு மாணவிகளை ஏற்றி செல்லும் வாகனங்களில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தல் கொடுத்துள்ளனர். ஆட்டோ போன்ற சிறியவாகனத்தில் அதிக அளவு மாணவ - மாணவிகளை ஏற்றி செல்வதால் விபத்து ஏற்பட அபாயம் உள்ளதாக எச்சரிக்கை கொடுத்து உள்ளார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விழுப்புரம்
இந்தியா
க்ரைம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion