Chembarambakkam Lake: மீண்டும் வெளுக்கும் மழை.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன?
வரும் 11-ஆம் தேதி சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள, நிலையில் தொடர்ந்து ஏரியின் நீர்மட்டம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
![Chembarambakkam Lake: மீண்டும் வெளுக்கும் மழை.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன? chembakkam lake water flooded water level in Lake is 400 cubic meter outflow Chembarambakkam Lake: மீண்டும் வெளுக்கும் மழை.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/08/41a7a5db5e24b665687a719df91c3ae71667914390570109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
![Chembarambakkam Lake: மீண்டும் வெளுக்கும் மழை.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/02/28a60c30d853e3d2aa93451c202290531667363035965109_original.jpg)
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு, மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில் தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெவிக்கப்பட்டுள்ளது
செம்பரம்பாக்கம் ஏரி
![Chembarambakkam Lake: மீண்டும் வெளுக்கும் மழை.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/02/28a60c30d853e3d2aa93451c202290531667363035965109_original.jpg)
ஏரி நிலவரம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து முதல் கட்டமாக 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. படிப்படியாக இந்த தண்ணீர் திறந்து விடப்பட்டு 500 கன அடியாக உயர்ந்துள்ளது. தற்பொழுது ஏரிக்கு நீர்வரத்து 150 கன அடி குறைந்துள்ளது. ஏரியில் இருந்து சுமார் 400 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஏரியின் நீர்மட்டம் 20.6 அடியை எட்டியுள்ளது. மழை பெய்தால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் அல்லது படிப்படியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்படலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.- பூண்டி ஏரியில் இருந்து 53 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. வரும் 11ம் தேதி சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ,தொடர்ந்து ஏரியின் நீர்மட்டம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வானிலை அறிவிப்பு
09.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
11.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)