மேலும் அறிய

செங்கல்பட்டு சீரா சீர்திருத்த பள்ளியில் செயல்பாட்டுக்கு வந்த பேக்கரி தொழிற்கூடம் - நல்வழிப்படுத்த புதிய திட்டம்

" சிறார் கூர்நோக்கு பள்ளியின் தரம் உயர்த்துவது தொடர்பாக ஒரு நபர் குழு, மூன்று மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் "

 
"22 லட்சம் மதிப்பீட்டில் ஆன திட்டத்தை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் துவங்கி வைத்தார்"
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 மருத்துவமனைகளில் ரூ.9,51,000/- (ரூபாய் ஒன்பது லட்சத்து ஐம்பத்தொராயிரம் மட்டும் ) மதிப்பில் இயன்முறை சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்து வழங்கப்பட்டது. அதனை தொடர்நது இன்று  நந்திவரம் தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையத்தில் முதியவர்களுக்கான இயன்முறை சிகிச்சை பிரிவு (Elders Physlotherapy Unit)  முதியவர்கள் பயன்பாட்டிற்கு  வருகிறது. அதனை தொடர்ந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம் திட்டத்தின் கீழ் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்களுக்கு ஊக்க பரிசு வழங்கினார். பிறந்த பெண் குழந்தைகளின் பெயரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் அவர்களால் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

செங்கல்பட்டு சீரா சீர்திருத்த பள்ளியில் செயல்பாட்டுக்கு வந்த பேக்கரி தொழிற்கூடம் - நல்வழிப்படுத்த புதிய திட்டம்
 
அதனை தொடர்ந்து ,செங்கல்பட்டில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் இன்று தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஆய்வு மேற்கொண்டார். இதனை அடுத்து தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் செங்கல்பட்டு சீர் நோக்கு இல்லத்தில்,  புதிதாக 22 லட்சத்தில் உருவாக்கப்பட்ட, பேக்கரி பொருட்களை தயாரிக்கும் தொழில் கூடத்தை திறந்து வைத்தார். இந்த தொழிற்கூடத்தில், பல்வேறு வகையான பிஸ்கட்ஸ், பன் ,கேக், வர்க்கி, ஆகியவை தயாரிக்கப்பட உள்ளன. இந்தத் தொழில் கூட பயிற்சி வழங்குவதற்கு, ஏற்கனவே சிறார் கூர்நோக்கி இல்லத்தில் பேக்கரி பயிற்சி பெற்ற மாணவர் பயிற்சி அளிக்க இருப்பது கூடுதல் சிறப்பு.
 

செங்கல்பட்டு சீரா சீர்திருத்த பள்ளியில் செயல்பாட்டுக்கு வந்த பேக்கரி தொழிற்கூடம் - நல்வழிப்படுத்த புதிய திட்டம்
 
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீதாஜீவன், "இந்த பேக்கரியில் விருப்பத்தின் பெயரில்  , பயிற்சி எடுத்து பொருட்களை தயாரித்துக் கொடுக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குழந்தை நேய அரசாக இந்த அரசு இருக்க வேண்டும் என, தமிழக முதலமைச்சரின் உத்தரவின் படி இந்த துறைக்கு 27 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்த துறை சார்பாக, மாணவர்களுக்கு பல்வேறு விருப்பங்கள் இருக்கும் அவற்றை நிறைவேற்றுவதற்காக, விளையாட்டு மைதானங்கள் அமைப்பது, இசை சொல்லிக் கொடுப்பது ஓவியம் சொல்லிக் கொடுப்பது உள்ளிட்டவற்றுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தையின் நலனுக்காக, 22 லட்சம் செலவு செய்து இந்த பேக்கரியை அமைத்த நிறுவனத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.

செங்கல்பட்டு சீரா சீர்திருத்த பள்ளியில் செயல்பாட்டுக்கு வந்த பேக்கரி தொழிற்கூடம் - நல்வழிப்படுத்த புதிய திட்டம்
 
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், "கூர்நோக்கு இல்லங்களை காலத்திற்கு ஏற்ப தரம் உயர்த்துவதற்காக, தொழிற்பயிற்சி விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பணிகள் கொடுப்பதற்கு, ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது, நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. மூணு மாதத்தில் இது குறித்து அவர் அறிக்கை தர உள்ளார்" என தெரிவித்தார்.
 
இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் உரிமைத்துறை  இயக்குநர் டி.ரத்னா , சமூக நலத்துறை இயக்குனர் அமர் குஷவா மாவட்ட வருவாய் அலுவலர்  இரா.மேனுவல்ராஜ், இணை இயக்குனர் தனசேகர பாண்டியன், மாவட்ட சமூக நலன் அலுவலர்  சங்கீதா, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் , சரவண குமார் மற்றும் இளைஞர் நீதி குடும்ப உறுப்பினர்கள் குழந்தைகள் நல குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் காவல்துறை சார்ந்த அலுவலர்கள் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget