தமிழ் எழுத்துக்களால் வரைந்த ஆனந்த் மகேந்திரா ஓவியம் ..! காஞ்சிபுரம் ஓவியரை பாராட்டி தமிழில் ட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா!
தனது உருவப்படத்தை தமிழ் எழுத்துக்களால் ஓவியம் தீட்டிய காஞ்சிபுரம் ஓவியரை பாராட்டி தமிழில் ட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா
காஞ்சிபுரம் சேர்ந்த சுந்தர்-முருகம்மாள் தம்பதியினர். இவர்களது இளைய மகன் கணேஷ் (25) சிவில் டிப்ளமா படித்துவிட்டு, தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வந்தார். சிறுவயது முதலே வித்தியாசமான முறையில் ஓவியம் மூலம் புது சாதனை படைக்க வேண்டும் என்கின்ற லட்சியத்தோடு மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த, கணேஷ் தனது நண்பர்கள் உறவினர்கள் அக்கம்பக்கத்தினர் என அனைவருக்கும் ஓவியங்களை வரைந்து கொடுத்து வந்துள்ளார்.
கொரோனா தாக்கம் காரணமாக தொழிற்சாலையில் விருந்து வெளியேறிய கணேஷ், தற்போது முழு நேரமாக ஓவியம் வரைவதை கவனம் கொண்டு உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழ் எழுத்துக்கள் 247, மற்றும் தமிழ் வட்டெழுத்துக்கள், உள்ளிட்ட 741 எழுத்துக்களால் "தெய்வப்புலவர் திருவள்ளுவரின் உருவத்தை தத்ருபமாக ஓவியமாக வரைந்திருந்தார்"!. இதனை கவனித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்பின் வழியது உயர்நிலை என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துக்களால் ஓவியக்கலையாக மாற்றிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும் வள்ளுவம் போல் இந்த ஓவியம் வாழும்", என இளைஞர் கணேஷ் வாழ்த்தினார்.
இந்நிலையில் இவர் மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திராவின் ஓவியத்தை வரைந்துள்ளார். தமிழ் எழுத்துக்களால் வரையப்பட்ட இந்த ஓவியத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். பிரபல சமூக ஊடகம் ஆக இருக்கும், டிவிட்டரில் ஆனந்த் மகேந்திரா அவை இணைத்து பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது தொடர்ந்து , இதனைப் பார்த்த ஆனந்த் மகேந்திரா அந்த புகைப்படத்தை, " ஆஹா என் உருவப்படும் தமிழ் எழுத்துக்களால், நான் வியக்கிறேன் புதிய படத்தில் வீட்டில் வைக்க விரும்புகிறேன் பாராட்டினார் ". இப்பொழுது இந்த ட்வீட் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆஹா, என் உருப்படம் 741 பழமையான தமிழ் எழுத்துக்களால் வடிவானது , நான் வியக்கிறேன்.
— anand mahindra (@anandmahindra) May 23, 2022
தமிழ் மொழி பிரம்மாண்டத்தின் பொருட்டு, உருவாக்கியவரின் பாராட்டாக , உருவ படத்தை என் வீட்டில் வைக்க விருப்பபடுகிறேன்.. https://t.co/9nAyMAlUAK
இதுகுறித்து புகைப்படத்தை வரைந்த கணேஷ் ,முவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதல் தற்போது வரை பயன்படுத்தும், தமிழ் எழுத்துக்கள் 247, மற்றும் தமிழ் வட்டெழுத்துக்கள், உள்ளிட்ட 741 எழுத்துக்களால் இந்த புகைப்படத்தை வாய்ந்ததாகும் இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்து இருந்த நிலையில் , எனக்கு அங்கீகாரம் கிடைத்து இருப்பதாகவும், நான் வரைந்த இந்த ஓவியத்தை ஆனந்த் மகேந்திரா அவர்களுக்கு பரிசளிக்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன் தெரிவித்தார்.