Watch Video : ”மனித உயிர் முக்கியமில்லையா?” அமித் ஷா வருகை.. நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்.. கொதித்த நெட்டிசன்
Amith shah : முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பேரன் திருமண விழாவிற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா வருகையால் சென்னையின் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது.

சென்னையில் நேற்று(31.01.25) மத்திய அமைச்சர் அமித் ஷா வருகையையோட்டி நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது.
வெங்கையா நாயுடு பேரன் திருமணம்:
முன்னாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் பேரன் திருமண விழா நேற்று மகாபலிபுரம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை 7 மணி அளவில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தங்கர், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இதையும் படிங்க:Budget 2025: மக்களே! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்! மக்களை மகிழ்விப்பாரா நிர்மலா சீதாராமன்?
அமித் ஷா வருகை: ‘
இந்த திருமணவிழாவில் கலந்துக்கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மாலை சென்னை வந்தார். அவரது வருகையோட்டி நேற்று சென்னையில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக சைதைப்பேட்டை முதல் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது.
இதையும் படிங்க: Budget 2025 LIVE: சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல்! ரூபாய் 62 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை!
ஸ்தம்பித்த ஜி.எஸ்.டி சாலை:
குறிப்பாக மீனம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் அமித் ஷா மற்றும் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தங்கர் வருகையின் போது போக்குவரத்தானது முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் வாகனங்கள் நகர முடியாமல் 3கி.மீ துரத்திற்கு ஸ்தம்பித்து நின்றது.
நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்:
Where is our india going in chennai this happened because of #amitsha arrival. a life is in critical situation has been stuck in traffic for more than hour. no traffic police around @mkstalin @narendramodi no value for human life...more than that politician arrival is important pic.twitter.com/gTgf3LflPU
— Keerthi (@keerthisai4538) January 31, 2025
இந்நிலையில் இந்த போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் ஒன்று சிக்கி மாட்டிக்கொண்டது . இதை நெட்டின்சன் ஒருவர் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் நம் இந்தியா எங்கே செல்கிறது. சென்னையில் அமித்ஷா வருகையால் இது போன்று நடந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் ஒரு உயிர் ஆபத்தான நிலையில் உள்ளது. சுற்றி போக்குவரத்து போலீசார் இல்லை என முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடியை டேக் செய்துள்ளார். மனித உயிருக்கு மதிப்பு இல்லை...அதை விட அரசியல்வாதி வருகை தான் முக்கியம் என்று பதிவிட்டுள்ளார்.

