தேசிய விழாக்கள் மற்றும் பிராந்திய நிகழ்வுகள் காரணமாக பிப்ரவரி மாதத்தில் விடுமுறை நாட்கள் அதிகம் உள்ளது.
அந்த விடுமுறை நாட்களில் வங்கிகள் செயல்படாது என ரிசர்வ் வங்கி(RBI) அறிவித்துள்ளது.
வங்கி விடுமுறைகள் பெரும்பாலும் விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களை பொறுத்தே இருக்கும்.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட விடுமுறைகள் பட்டியலின்படி ஆந்திர பிரதேசம், ஹரியானா, ஒடிசா, மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், மஹாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக நாட்கள் வங்கி விடுமுறைகள் உள்ளது.
தமிழ்நாட்டில் பிப்ரவரி 11-ம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை.
பிப்ரவரி 26 மகாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு உட்பட பெரும்பான்மையான மாநிலங்களின் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாம் சனிக்கிழமை(பிப்ரவரி 8) மற்றும் நான்காம் சனிக்கிழமை(பிப்ரவரி 22) வங்கிகள் செயல்படாது.
அனைத்து ஞாயிற்றுகிழமை நாட்களிலும்(பிப்ரவரி 2, 9, 16, 23) வங்கிகள் செயல்படாது.
தொடர் வங்கி விடுமுறைகள் காரணமாக ஏடிஎம்-களில் பணம் எடுப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம்.
அதானால் மக்கள் வங்கி சார்ந்த நடவடிக்கைகளை இடையூறு இல்லாமல் முன்பே திட்டமிட்டுக்கொள்வது அவசியம்.