மாணவர்களே அரசு இலவச விடுதி வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்?
Hostel Admission செங்கல்பட்டு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென கீழ்க்கண்டவாறு மொத்தம் 14 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
![மாணவர்களே அரசு இலவச விடுதி வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்? Admissions are open to the school and college students' hostels run by the Backward Classes Welfare Department in the district Chengalapptu Details மாணவர்களே அரசு இலவச விடுதி வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/20/4cd244cdb22b830cec97c0087f1a5daf1666262045509109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு அரசால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென கீழ்க்கண்டவாறு மொத்தம் 14 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
வ.எண் |
விடுதியின் விவரம் |
மாணவர்களுக்கானது |
மாணவியர்களுக்கானது |
1. |
பள்ளி விடுதிகள் |
அரசினர் பள்ளி மாணவர் (மிபிந) விடுதி, நந்திவரம். |
அரசினர் பள்ளி மாணவியர் (மிபிந) விடுதி, திருப்போரூர். |
அரசினர் பள்ளி மாணவர் (மிபிந) விடுதி, எல்.எண்டத்தூர். |
அரசினர் பள்ளி மாணவியர் (மிபிந) விடுதி, மதுராந்தகம். |
||
அரசினர் பள்ளி மாணவர் (மிபிந) விடுதி, மதுராந்தகம். |
அரசு பள்ளி மாணவியர் (சீம) விடுதி, அனகாபுத்தூர் |
||
அரசினர் பள்ளி மாணவர் (மிபிந) கருங்குழி. |
- |
||
அரசினர் பள்ளி மாணவர் (மிபிந) விடுதி, ஒரத்தி.
|
- |
||
2. |
கல்லூரி விடுதிகள் |
அரசு கல்லூரி மாணவர் (மிபிந) விடுதி செங்கல்பட்டு |
அரசு கல்லூரி மாணவியர் (பிந)விடுதி செங்கல்பட்டு |
அரசு கல்லூரி மாணவர் (பிந) விடுதி தாம்பரம் |
அரசு கல்லூரி மாணவியர் (பிந)விடுதி தாம்பரம் |
||
அரசு கல்லூரி மாணவர் (பிந) விடுதி நெம்மேலி |
அரசு கல்லூரி மாணவியர் (மிபிந) விடுதி நெம்மேலி
|
2) பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர் / மாணவியர்களும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு , பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ / மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர் .
3) விடுதிகளில் பின்வரும் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
- அனைத்து விடுதி மாணவ / மாணவியருக்கு உணவு தங்கும் வசதியும் அளிக்கப்படும்
- 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியருக்கு 4 இணைச் சீருடைகள் வழங்கப்படும் .
- 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.
4) விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்
- பெற்றோர் / பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும் .
- இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ -க்கு மேல் இருக்க வேண்டும் . இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.
5) தகுதியுடைய மாணவ / மாணவியர் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் .
6) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் , காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.06.2023 -க்குள்ளும் கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.07.2023 க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ / மாணவியர்கள் விண்ணப்பிக்கும்பொழுது சாதி மற்றும் பெற்றோரது அண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் யாதும் அளிக்கத் தேவையில்லை . விடுதியில் சேரும் போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.
7) தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன . எனவே மாணவ / மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)