மேலும் அறிய
Advertisement
"யார் செய்யலன்னாலும் பரவால்ல, நான் இருக்கேன்" : மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கெத்து காட்டிய மூதாட்டி..
Kanchipuram News : " காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சாலை ஓர வியாபாரி மூதாட்டி ஒருவர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது "
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சாலை ஓர வியாபாரி மூதாட்டி ஒருவர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை ஓர வியாபாரி மூதாட்டியின் செயல்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வரும் நிலையில் அப்பகுதியில் போடப்பட்டுள்ள தார் சாலை ஆங்காங்கு சிதிலமடைந்தும், பள்ளம் மேடாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் வாகனத்தை இறக்காமல் ஒதுங்கி வாகனத்தை இயக்குவதால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் மழைக்காலங்களில் நீர் தேங்கி வாகனங்கள் செல்லும்போது, சாலையில் உள்ள நீர் பாதசாரிகள் மற்றும் வியாபாரம் செய்யும் இடங்களில் சேரும் நீரும் வாரியடிக்கும் நிலை உருவாகின.
இந்நிலையில் அப்பகுதியில் சாலையோர வியாபாரி மூதாட்டி பத்தாண்டு காலமாக அப்பகுதியில் அமர்ந்து வேர்க்கடலை மற்றும் பழங்கள் விற்பனை செய்து வருகிறார். இவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் வாங்கி சாப்பிட்டு வந்தனர். இவ்விடத்தில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் தனது சொந்த செலவில் சிமெண்ட் கலவையை நிரப்பி சரி செய்து வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படாத வண்ணம் மூதாட்டி செய்த இச்செயல் அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றனர்.
இப்பகுதியில் பல்வேறு அரசு உயர் அலுவலர்கள் அவ்வழியாக சென்று சிற்றுண்டி தேநீர் அருந்துவதும் அப்பகுதியாக செல்வதுமாக இருந்தாலும் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்யும் நோக்கம் யாரிடமும் ஏற்படாத நிலையில் சாலை ஓர வியாபாரி மூதாட்டி செய்த செயல், அரசு அலுவலர்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலைகள் சீர் அமைக்காமல் உள்ளதை விரைவில், சீர்படுத்தி தரும் முன் வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றன
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion