விழுப்புரம்: மாணவிகள் மீது ஆசிட் கொட்டிய சம்பவம்- பள்ளி தலைமை ஆசிரியர் இடைநீக்கம்
’’விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜாராமை பணி இடைநீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை நடவடிக்கை’’
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் உள்ள வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி ஆய்வகத்தில் இருந்த ஆசிட் கொட்டியதில் மாணவி 4 பேர் படுகாயம் அடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று 12 வகுப்பு மாணவ மாணவிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர், இந்த நிலையில், இந்த பள்ளியில் உள்ள ஆய்வகம் ஒன்று நெடுஞ்சாலை விரிவாக்கம் காரணமாக இடிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பள்ளிக்கு விடுமுறை என்பதால் அந்த ஆய்வகத்தில் இருந்த ஆய்வக பொருட்களை அகற்றாமல் இருந்துள்ளனர்.
Tamil Survivor Review: சர்வைவர் ஷோ 1st Episode எப்படி இருக்கு?
இந்த நிலையில் இன்று பள்ளிகள் திறந்த பின்பு சில மாணவிகள் கட்டட இடிபாடுகளுக்கு இடையிலுள்ள ஆய்வகத்தில் இருந்து ஆசிட் உள்ளிட்ட பொருட்களை அங்கிருந்து எடுத்து கொண்டிருந்தனர். அப்போது இடிபாடுகள் உள்ள கான்கிரீட் கட்டை ஒன்று அந்த ஆய்வகத்தில் வைத்து இருந்த ஆசிட் கண்ணாடி பாடலின் மீது பட்டுத்தெளித்து உள்ளது. இதனால் அங்கு ஆய்வக பொருட்களை அகற்றி கொண்டிருந்த மாணவிகள் மீது பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு மாணவிக்கு முகம் பகுதியிலும் மற்ற மூன்று மாணவிகள் கை கழுத்து முதுகுப் பகுதிகளில் ஆசிட் காயம் ஏற்பட்டது.
NEET Suicide : நீட் தேர்வு.. தமிழ்நாட்டில் தொடரும் சோகம்.. வாழ்க்கையை முடித்து கொண்ட தனுஷ்
அங்கிருந்தவர்கள் உடனடியாக அந்த மாணவிகளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதை தொடர்ந்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் மாணவிகள் சிகிச்சைக்கு இருக்கக்கூடிய புதுச்சேரி தனியார் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை பார்த்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜாராமை பணி இடைநீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ, மாணவிகள் பள்ளி சென்று உள்ள சூழ்நிலையில் விழுப்புரம் அருகே உள்ள கண்டமங்கலம் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள பெற்றோர் கலக்கம் அடைந்துள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளி ஆய்வகத்தில் இருந்த ஆசிட் கொட்டியதில் மாணவி 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.
TN Assembly: "நீட்டால செத்தது போதும்" - சட்டசபையில் ஸ்டாலின் உணர்வுப்பூர்வ உரை
Vadivelu Birthday Special : எனக்கு எண்டே இல்ல.. ஆல் ஏரியா கில்லி.. வடிவேலு 2.0